எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சைவம் - அழகே அழகே எதுவும் அழகே அழகே...

சைவம் - அழகே அழகே எதுவும் அழகே


அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இல்லை கூட ஒரு அழகு

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மை அது தான் மெய்யாய் அழகு

குயில் இசை அது பாடிட
ஸ்வர வரிசைகள் தேவையா
மயில் நடனங்கள் ஆடிட
ஜதி ஒலிகளும் தேவையா

நதி நடந்து சென்றிட
வழி துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட
மொழி இலக்கணம் தேவையா

இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால்
இந்த வாழ்க்கை முழுதும் அழகு

அழகே அழகே எதுவும் அழகே

இதயம் ஒரு ஊஞ்சலே
இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தொலைந்திடும்
துன்பத்தில் அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே
நினைப்பதில் பொருள் இல்லையே
நடப்பதை நாம் எண்ணினால்
அதைவிட உயர்வில்லையே

போக்கும் பூவில் வீசும்
வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும்
நம் நேசம் ரொம்ப அழகு

அழகே அழகே ....

பதிவு : vaishu
நாள் : 1-Jul-14, 5:06 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே