எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வலி இல்லாமல் பிரசவம் இல்லை. வார்த்தை இல்லாமல் கவிதை...

வலி இல்லாமல்
பிரசவம் இல்லை.
வார்த்தை இல்லாமல்
கவிதை இல்லை.
நீ இல்லாமல் நானில்லை
உன் வாசம் இல்லாமல்
என் சுவாசம் இல்லை.
ஒருமுறை சந்தித்தோம்
அது காவியம்.
உள்ளத்தில் வரைந்துள்ளேன்
அது ஓவியம்.
வாசனே!
கனவில் வந்து
என்னை கொன்று தின்னும் நேசனே!
மறுமுறை சந்திக்க துடிக்கிறேன்.
வெட்கம் விட்டு சொல்லுகிறேன்
வேதனைத் தீயில் வெடிக்கிறேன்.
மரணம்
வருவதற்குள் வந்துவிடு-இல்லை
மரணத்துக்கு மரணம் தந்துவிடு.

சுசீந்திரன்

நாள் : 8-Aug-14, 9:12 pm

மேலே