நான் பிணம் பேசுகிறேன்... இரண்டு காலில் நடக்கும் போது...
நான் பிணம் பேசுகிறேன்...
இரண்டு காலில்
நடக்கும் போது
பல ஆட்டம் போட்டு
ஓய்ந்து போய்
நான்கு காலில்
முடங்கி கிடக்கிறேன்
இனி என்னை
எட்டு கால்கள் நடக்க
நான்கு தோள்கள் சுமக்க போகிறது...
என்னை ஏரிக்கவோ
புதைக்கவோ முடிவு செய்வார்கள்...
புதைக்க முடிவு செய்தால்
எனக்கு இருந்த
மண் ஆசையில்
நான் சேர்த்த
பாவங்கள் எல்லாம்
என்னை திங்க போகிறது...
என்னை முடிவு செய்தால்
நான் வாழ்ந்த காலத்தில்
செய்த பாவங்கள் எல்லாம்
என் நரம்பினை முருக்கேற்றி
ஒருமுறை எழ நினைப்பேன்..
என்னை எரிபவானோ
இவன் மீண்டும்
எழுந்து போய்
ஆட்டம் போட்டால்
பூமி தாங்காது என்று
ஒரே அடியில்
என்னை வீழ்ததிவிட்டுத் அவன்
பெருமூச்சு விடுவான்...
நான் கடைசியில்
உணர்ந்தது இதுதான்
புதைந்து போனால் எலும்பும்
எரிந்து போனால் சாம்பலும் தான்...
மண்,பொன்,பெண் ஆசையோ அல்ல...
-ஆனந்த் கெ.ம