நண்பர்களே.. *ஹைக்கூ கவிதை என்றால் என்ன? ஹைக்கூ கவிதை...
நண்பர்களே..
*ஹைக்கூ கவிதை என்றால் என்ன? ஹைக்கூ கவிதை எழுதுவதன் சரியான முறை என்ன?* என்று பதிவு செய்திருந்த கேள்விக்கு பதிலாய் , திரு.கவித்தாசபாபதி ஐயா அவர்கள் அளித்த விளக்கத்தை , தங்களின் பார்வைக்காக இங்கே பதிவு செய்கிறேன் நண்பர்களே...
ஹைக்கூ கவிதைகள் :
*****5,7,5 என்ற யாப்பை / மரபை தாண்டி
சுருக்கியோ அல்லது விரிந்தோ
சுதந்திரமாக பறக்கிறது
ஹைக்கூ பறவை
உன்னையும் என்னையும்
இவர்களையும் போல .....
மூன்றாவது அடியில்
அடித்து நொறுக்க வேண்டும்
அல்லது
துவைத்துப்பிழிய வேண்டும் ..
அது .. ஹைக்கூ!
இரண்டு அடிகள்
இரண்டு சிப் மது
முன்றாவது சிப்பில்
வீழ்ந்துவிட வேண்டும்..
அந்த போதைதான் ஹைக்கூ..
நிறப்பிரிகையில்
பள்ளத்தாக்கு பூக்களின் மீது எழும்பும்
வானவில் போல
மனப்பிரிகையில் எழும்
வர்ணம்தான் ஹைக்கூ...
ஒரு காட்சியை, உணர்வை, அழகை, சுவையை, இசையை, லயத்தை இதைவிட அழகாக சொல்லமுடியாது என்ற கவி வடிவம்தான் ஹைக்கூ.....!
மிக எளிதாக ஹைக்கூ.....படைக்கிறார்கள்
ஹைக்கூ எளிதல்ல
இங்கு படைப்பவை யாவும் ஹைக்கூ அல்ல.
///உன் வீடு இடிந்தாலென்ன
என் வீடு இடிந்தாலென்ன
புயலுக்கோ பாதை தேவை ///
இயற்கையின் சீற்றத்தை
கண்ணீரில் எழுதிவிடும்
இது ஹைக்கூ!
//இறந்த பிறகும்
இயற்கையை ரசிக்க
கண்தானம் ///
உபதேசம் செய்யாமல்
உள் விதைக்கும்
விதைதான் ஹைக்கூ!
//இதய தளம் தேடும்
இணைய தளம்
கல்யாண .காம் //
கணினி அறிவியலையும்
கவிதையாக்கும்
நயம் தான் ஹைக்கூ!
///மண்ணெண்ணெய் விளக்கொளியில்
கந்தசாமி படிக்கிறான்
கம்ப்யுடர் சைன்ஸ்//
என்ற ஏழ்மை சித்தரிப்பின்
யதார்த்தம் ஹைக்கூ!
///மண்ணிலிருந்து ஒரு பூ
செடியை நோக்கி பறக்கிறது
ஒ .. வண்ணத்துபூச்சி //
இந்த அழகு ஹைக்கூ!
///கந்தா...
கள் குடிக்க போவோமா
காந்தி புரத்துக்கு?//
என்ற நக்கலும் ஹைக்கூ!
//துயரக்கடல்களைத்தாண்டி
ஒரு மணித்தீவு
மயானம் ///
இந்த மௌனம் / தியானம் ஹைக்கூ!
******
வானம்பாடிகளையும் வசப்படுத்திவிடும்
வண்ணத்துபூச்சி
ஹைக்கூ..!
காலையின் கூட்டிசையில்
குயிலின் குரல்
ஒரு ஹைக்கூ..!
///குயில்பாட்டை பற்றி
காகம்
நான் !///
இது ஹைக்கூ அல்ல ..!
ஹைக்கூ சொல்ல
குயிலாகவேண்டும் ! *****