தள விதிமீறல்
நேற்று இரவு 10.30 மணிக்கு விழித்து,சிரமமெடுத்து கற்பனை செய்து பதிவு செய்த நகைச்சுவை, இன்று காலை 10.45 மணிக்கு இன்னொரு தோழர்,அப்படியே காப்பி செய்து மறுபதிவு செய்துள்ளார். மூளையை உபயோகித்து கற்பனை செய்ய வக்கில்லாதவர்கள் ஏன் அடுத்தவரின் கற்பனையில் களவு செய்கிறார்கள்?என்னை பொருத்தவரை என்னிடமிருந்து பணத்தை திருடுபவனும்,பதிவை திருடுபவனும் ஒன்றுதான்.இதற்கு கட்டுபாடான விதிகளை எழுத்து தளமிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தீர்வான கருத்துகளை அன்பர்களிடம் வேண்டுகிறேன்.