சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறந்த நடிகர்தான்.அதில் மாற்றுக் கருத்து இல்லை. அரசியல் என்று ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது என்று தன் படம் புதிதாக ரிலீஸாகும் போது மட்டும் ஞானோதயம் பெற்றவர் போல தனது அரசியல் பிரவேசம் பற்றி ஒவ்வொரு முறையும் பேசும் மனப் பக்குவத்தையும், ரசிகர்களை புத்துணர்ச்சி மருந்து கொடுத்து தக்க வைப்பதையும், மீனவர், காவிரி , முல்லைப்பெரியார், விலையேற்றம் போன்ற பல பிரச்சினைகளில் அமைதி காக்கும் அடக்கத்தையும் வைத்துக் கொண்டு தனது புதிய படம் ரிலீஸாகும் நேரம் மட்டும் பொது வாழ்வின் அங்கமான அரசியல் பிரவேசம் பற்றி பேசி மக்களையும் ரசிகனையும் ஏமாற்றும் இந்த அரசியல் ராஜதந்திரி சாமான்ய அரசியல்வாதிகளுக்கும் சூப்பர் ஸ்டார்தான் என்பது என் கருத்து ( நானும் ஒரு காலத்தில் ரஜினி ரசிகன் )
இது பற்றி தங்கள் கருத்து என்ன ? .