படைப்புகள்

நான் இத்தளத்தில் இணைந்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு வந்து கொண்டிருந்த படைப்புகள் தொடர்ந்து வருவதற்கான தூண்டுதலாயும், கருத்தளிக்க முனைப்பூட்டவதாயும் அமைந்திருந்தன. அதற்கும் ஒரு வருடத்திற்கு முன்பான படைப்புகள் மொழிஞானமற்றவனாயிருந்த என்னையும் வாசிக்கவுந்தி, கவிதை(கவிதைதானே?!?!?!) எழுதக்கூடியவனாய் வளர்க்கும் அளவிற்கு இருந்தன. ஆனால், தற்போது என்னால் அதிகமாக தளத்திற்கு வரமுடியாவிட்டாலும், அவ்வப்போது வரும்போது வாசிக்கும் பெரும்பான்மையான படைப்புகள் அயர்ச்சியளிப்பதோடில்லாமல் கற்று இன்புற்று கருத்தளித்து செல்லும் ஆர்வத்தையும் குறைத்து அடுத்த வருகைக்கான இடைவெளியை அதிகரித்து விடுகிறது. இது பின்கதை.

என்னுடைய கேள்வி அல்லது சந்தேகம் யாதெனில், தற்போதுள்ள பெரும்பான்மை படைப்புகள் படைப்பூக்கமோ, கருத்தூக்கமோ தராமலிருப்பதன் காரணம், என்னுடைய எதிர்பார்ப்புகளின் நிலையளவு அதிகரித்ததனாலா? அல்லது உண்மையிலேயே படைப்புகளின் தரம் குன்றியுள்ளதா?



கேட்டவர் : ஈஸ்வரன்
நாள் : 17-Jul-15, 10:10 pm
0


மேலே