கனவுகள்

கனவுகள் நம் ஆழ் மனதுடன் தொடர்புடையவை சில சமயம் அமானுஷ்யம் ஆனவையும் கூட..
நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் உறக்கத்தில் கனவுகளாக வருகின்றன ஆனால் சிலருக்கு எதிர் காலத்தில் நிகழப் போகும் சம்பவங்கள் கூட முன் கூட்டியே கனவில் வருகின்றன அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் படு கொலை செய்யப்பட முன் அவருக்கு வந்த கனவை ஏப்ரல் 04,1865ஆம் ஆண்டு அவரே விபரிக்கின்றார் இவ்வாறு....
" பத்து நாட்களுக்கு முன் மிகவும் முக்கியமான வேலைகளின் காரணமாக, நான் மிகவும் தாமதமாக படுக்கைக்கு சென்றேன். மிகுந்த களைப்பின் காரணமாக எனக்கு சரியாக உடனே தூங்கி விட்டேன். அன்று எனக்கு ஒரு கனவு வந்தது.

அங்கே மரண அமைதி இருந்தது. பிறகு நான் விசும்பல்களை கேட்டேன், பலர் அழுது கொண்டிருந்தனர். நான் என் படுக்கையிலிருந்து எழுந்து படிகளில் கீழே இறங்கி வந்தேன் என நினைக்கிறேன். அங்கே அதே அழுகையால் அமைதி கலைந்தது. ஆனால் அழுபவர்களை காண முடியவில்லை.

நான் ஒவ்வொரு அறையாக சென்றேன்; எங்கும் யாருமே தென்படவில்லை. எல்லா அறையிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எல்லா பொருட்களும் எனக்கு பழக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் துக்கம் கொண்டாடும் அழுவும் நபர்கள் எங்கே? எனக்கு குழப்பமாகவும் அச்சமாகவும் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? நான் பார்த்த சூழ்நிலைகள் மிகவும் விசித்திரமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

எனக்கு அப்படித்தான் இருந்தது கிழக்குப் பக்க அறைக்கு செல்லும் வரை. நான் அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கே நான் ஒரு ஆச்சரியத்தை கண்டேன். எனக்கு முன்னால் ஒரு சவப்பெட்டியை ஏற்றிச் செல்லும் வண்டி இருந்தது. அதன் மேல் ஈமச்சடங்களுக்கான உடையணியப்பட்ட ஒரு பிணம் இருந்தது. அதைச் சுற்றி படைவீரர்கள்

பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தணர். அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் பிணத்தை பார்த்து அழுது கொண்டிருந்தனர். அந்த பிணத்தின் முகம் மூடப்பட்டிருந்தது. நான் ஒரு படைவீரனிடம் கேட்டேன் “யார் வெள்ளை மாளிகையில் இறந்து விட்டார்?” படைவீரன் பதில் சொன்னான் “ஜனாதிபதி”; “அவர் ஒருவனால் கொல்லப்பட்டார்”. பிறகு கூட்டத்திலிருந்து பெரும் அழுகை ஏற்பட்டது. நான் விழித்துக் கொண்டேன். நான் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. அது வெறும் கனவுதான் என்றபோதிலும், எனக்கு இதுவரை அதுதான் விநோதமாக தொல்லை தந்தது."
பத்து நாட்கள் கழித்து ஏப்ரல் 14 ஆப்ரகாம் லிங்கன் ஒருவனால் சுடப்பட்டார். அவருடைய உடல் மக்களின் பார்வைக்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பக்க அறையில் கிடத்தப்பட்டிருந்தது.
கனவுகள் எதிர்காலத்தில் நிகழப் போகும் சம்பவங்களை உணர்த்துநின்றன என்பது உண்மையா? இல்லையா ? இருந்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்



கேட்டவர் : சிவநாதன்
நாள் : 19-Dec-17, 9:14 pm
0


மேலே