பணம் மனம் ஞானம்

(Tamil Nool / Book Vimarsanam)

பணம் மனம் ஞானம்

பணம் மனம் ஞானம் விமர்சனம். Tamil Books Review
பணம் மனம் ஞானம் - உங்களுக்குள் இருக்கும் தொழில்முனைவோரை, செல்வந்தரை கண்டறியும் பள்ளி, கல்லூரி பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்.

நூலாசிரியர் திரு. ‘பாசிடிவ்’ பெருமாள் அவர்களுக்கு முதலில் என் பாராட்டுதல்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தலைமுறை மாற்றத்திற்கான பணிகளை செம்மையாக, அமைதியாக செய்து கொண்டிருக்கிறார்.

‘பணம் மனம் ஞானம்’ புத்தகத்தின் நூலாசிரியர் அவர்கள் பணம் மனம் மற்றும் ஞானம் ஆகியவற்றை எந்த மனோபாவத்தோடு எந்த மனநிலையோடு அணுக வேண்டும் என்பதை மிகத் தெளிவாக புரியும் நடையில் விவரித்திருக்கிறார்.

காலம் எனும் ஆசான் தனக்கு அனுபவங்கள் மூலம் தெளிவுபடுத்திய பாடங்களை, எந்த ஒரு தனி நபர் தொழில்முனைவோர் ஆக விரும்புகிறாரோ, அவர்களுக்கு எழுத்து வடிவமாக மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமான அனுபவங்களாகவே உள் வாங்கும்படி பகிர்ந்து இருப்பது மிகச் சிறப்பான அம்சமாகும்.

மிகச் சிலருக்கே உரித்தான அனுபவத்தை, அனுபவமாகவே பகிரும் தன்மையை வெகுச் சிறப்பாக, திறம்பட, எளிமையுடனும், உணர்வு மாறாமலும் நூலாசிரியர் வடிவமைத்திருக்கிறார்.

படிப்பை முடித்தவுடன் தொழில் தொடங்க முனைவோருக்கும், மாத சம்பளத்தில் வேலை செய்வோர் தன் நிலையை தொழிலதிபராக உயர்த்த விரும்புவோரும், தங்களுடைய உடல் (Body), மனம் (Mind), ஆன்மா (Soul), ஆற்றல் (Energy), ஆகிய அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, அவர்களின் திறமைகள் (Skills), அணுகுமுறைகள் (Attitude), மற்றும் அறிவுத்திறன் (Knowledge) ஆகிய அனைத்தையும் மேம்படுத்தும் வகையில், அதற்கு தேவையான அனைத்து கருவிகள் (Tools), செயல்முறைகள் (Processes), நடைமுறைகள் (Procedures) மற்றும் மாதிரிகளை (Models) எவருக்கும் புரியும் வண்ணம் புத்தக வடிவில் தந்திருக்கிறார்.

வெற்றிக்கான இரகசியம் ‘நில் கவனி செல்’ என மிக எளிமையான முறையில் விவரித்திருப்பது சிறப்பு அம்சமாகும்.

“வேறு வழியில்லாமல் கிடைக்கும்
வழிகளில் கூட வழிகள் கிடைக்கும்” - நான் ரசித்தது.

பணக்காரர்கள் பற்றியும், பணம் பற்றியும் அவர்கள் பார்வையில் எப்படி உணர்கிறார்கள்? அதே சமயம் பணக்காரர்கள் பற்றியும், பணம் பற்றியும் நடுத்தரவர்க்கத்தினர் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் மிகத் தத்ரூபமாக படம்பிடித்து காட்டியிருக்கிறார். அப்படியான எதிர்மறையான பார்வையிலிருந்து, எப்படி நேர்மறைக்கு மீள்வது என்பதையும் புரியும்படி பகிரவும் செய்திருக்கிறார்.

விரும்புகிற பொருள், வெறுக்கும் பொருள் பற்றிய ஒப்பீடும், விளக்கமும் அதனைச் சார்ந்த சமூக சிந்தனையும் சாலச்சிறந்தது.
மனம் மற்றும் அதன் சக்தி பற்றிய நூல் ஆசிரியரின் உளவியல் பார்வையில் தெளிவு பிறக்கிறது. தொழில் முனைவோர் குறித்து பண்டைய பாரத வரலாற்றுக் குறிப்புகள் பிரமிப்பை தருகிறது.

‘பாசிடிவ்’ பெருமாள் அவர்கள் மிகவும் மதிப்புமிக்க, விலை மதிப்பற்ற, அரிய ரகசியங்களை (நடுத்தர வர்க்கத்தினருக்கும், செல்வந்தர்களுக்கும் உள்ள 101 வேறுபாடுகள்) உங்கள் முன் போட்டுடைத்திருக்கிறார்.

அதில் புதைந்திருக்கும் முத்துக்களையும், வைரங்களையும் கண்டு உணர்ந்து, அதன் மதிப்பறிந்து, செயல்படுத்தி, உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பும் உன்னத நிலையான தொழிலதிபர் கனவை அடைவது என்பது வாசகர்களுக்கு மிகவும் இலகுவாக அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.

அறிவு (Knowledge), தெளிந்த அறிவு (Wisdom), நோக்கம் (Purpose) ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி மிகவும் எளிமையான முறையில் புரியும்படி சொல்லியிருக்கிறார்.

வியாபார மனநிலை குறித்து ஆராய்ச்சி குறிப்புகளுடன், சமன்பாட்டு சூத்திர வடிவில் விலகியிருப்பது புதுமை மற்றும் அனைத்தையும் புரிதலுடன் முழுமையாக உள்வாங்குவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

ஒரு தனி மனிதனின் பிரச்சனைகளை தீர்த்து அவன் வாழ்க்கைத் தரத்தின் மதிப்பைக் கூட்ட முடியும் என்றால் அது தான் உங்கள் வணிக மாதிரி.
உங்களின் வணிக மாதிரியை (Business Model) அடையாளம் காண இந்த புத்தகம் உறுதுணையாக இருந்து உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

‘படிப்பு, வேலை, ஓய்வு’ என்கிற நிலை மாறி ‘படிப்பு, தொழில், சுதந்திரம்’ என்கிற நிலையை உருவாக்க எத்தனிக்கும் ‘பாசிடிவ்’ பெருமாள் அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பாஸ்கரன் ஜெ
#1 Amazon Bestselling Author of Book ‘Blueprint to Abundant Success’
Success Mindset Coach & NLP Trainer
Founder & CEO of Abundant Success Academy

சேர்த்தவர் : PositivePerumal
நாள் : 6-Jul-22, 9:35 pm

பணம் மனம் ஞானம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே