சேர்த்தவர் : கன்னி தங்கமுருகன் s, 9-Nov-17, 8:18 pm
Close (X)

கழிவுநீர் தேங்காதபடி சாக்கடைகள் பராமரிக்கப்படவேண்டி மனு

ஏதோ கடனுக்காக கட்டப்பட்ட சாக்கடைகளின் நிலை மாற்றப்பட வேண்டும். எங்கும் சாக்கடை நீர் தேங்காதபடி கட்டுவதுடன்¸ சாக்கடையின்மேல் ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். சாக்கடைவிசயத்தில் எவ்விதமான பாகுபாடும் பார்க்காமல் சாலைகளுக்கு தேவையான இடத்தைவிட்டு சாலையில் தண்ணீர் தேங்காதபடி சாலைகளை அமைத்து சாக்கடை அமைக்கவேண்டும். சாக்கடைகளை முழுவதும் மூடாமல் அடைத்துள்ள குப்பையை எடுக்க திறந்த நிலையில் இருக்க செய்வதுடன் சாக்கடையில் சாக்கடை நீர் தவிர வேறு குப்பை போடுபவருக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் சாக்கடை ஆக்கிரமிப்புகளை எடுத்து சாக்கடை நீர் தடையின்றி செல்ல வழி செய்தால் மழைகாலங்களில் எந்த தண்ணீரும் வீட்டிற்கு வராமல் இருக்குமே? இதை சரியாக செய்து பராமரிப்புகளை கையாண்டால் நன்றாக இருக்கும். செய்வார்களா? இல்லை மழையின் போது மட்டும் சாக்கடைதூர்வாரி வீட்டுக்கு சாக்கடை அபிசேகம் செய்துகொண்டே இருப்பார்களா ஆண்டுதோறும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்

கழிவுநீர் தேங்காதபடி சாக்கடைகள் பராமரிக்கப்படவேண்டி மனு மனு | Petition at Eluthu.com


மேலே