சேர்த்தவர் : மு முருக பூபதி s, 3-May-14, 8:02 am
Close (X)

நிலத்தடி நீர் மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட வேண்டும் ...!

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் கீழே போய்க்கொண்டுள்ளது. இதனை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை ..! மழை நீரை பூமியில் உள்ள குளம் குட்டைகளில் தேக்கி மழை நீர் வீணாவது தடுக்க பட வேண்டும் ..! மேலும் மேற்கு நோக்கி ஒடி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தென் மாவட்டங்களில் உள்ள குளம் குட்டைகளில் நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் ..! இன்றைய நிலையில் தென்னை பனை மரங்கள் கூட பல பகுதிகளில் வறட்சியை தாக்கு பிடிக்க முடியாமல் வாடி கருகுகின்றன ...! மழை நீர் சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ள தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் போர்கால நடவடிக்கை எடுத்து ..இதற்கென நிலத்தடி நீர் மேம்பாட்டு வாரியம் அமைத்து தமிழகத்தில் வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ...! இந்த மனுவினை எழுத்து.காம் நண்பர்கள் மற்றவர்களுக்கும் பகிர்ந்து அதிக ஓட்டுக்கள் வழங்கினால் நமது தமிழம் பயன்பெறும் ...!

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 7 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

நிலத்தடி நீர் மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட வேண்டும் ...! மனு | Petition at Eluthu.com



மேலே