சேர்த்தவர் : Drvr Sathis Kumar s, 13-Oct-15, 9:18 pm
Close (X)

மிக்சி,க்ரிண்டெர்,மின்விசிறி புரியாத புதிர்கள்

மிக்சி,க்ரிண்டெர்,மின்விசிறி புரியாத புதிர்கள் மனு | Petition

அம்மா உணவகம்,அம்மா மினரல் வாட்டர்,சிற்றுந்து திட்டம். 104 தொலைபேசி வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனை மையம்,பண்ணை பசுமை திட்டம்,இலவச ரேஷன் அரிசி திட்டம்,,முதல்வர் காப்பீடு திட்டத்தில் ஏழை மக்கள் பலரால் சிகிச்சை மேற்கொள்ள முடியாத பல உயர்தர சிகிச்சைகளை ஒருங்கிணைத்து பல உயிரை காத்த திட்டங்கள் ...மற்றும் பல திட்டங்கள் இருக்கையில் ... தமிழ்நாடு முழுவதும் மிக்சி.கிரைண்டர்.மின்விசிறி பகிர்ந்தளிப்பில் 30/06/2011 இல் எந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினார்களோ அதே ரேஷன் கடைக்குட்பட்ட பகுதியில் FMG திட்டம் செயல்படுத்தப்படும் போது தான் பயன் பெற முடியும் என்கிற வழிகாட்டுதல்! பல்வேறு பகுதிகளில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாலும், பொங்கல் பரிசு, இலவச வேட்டி, சேலை என அரசின் பல்வேறு நல திட்டங்கள் அந்தந்த ரேஷன் கடைகளிலேயே கிடைக்கபெற்றதாலும்,மக்கள் மனதளவில் தற்போதைய ரேஷன் கடைகளிலேயே இத்திட்டம் கிடைக்கபெறும் என நம்பியுள்ளனர்..மேலும் வாடகை வீட்டில் வசிக்கும் பெரும்பாலான ஏழை மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கவும் சமாளிக்கவும் இடம்பெயர்தல் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.மேலும் உதரணமாக கன்னியாகுமரியில் வசிக்கும் ஒரு குடும்பம் 30/6/2011 இற்கு பிறகு சென்னையில் குடிபெயர்ந்து குடிமை பொருட்களை இங்கேயே பெற்றுவந்தாலும் இந்த மிக்சி க்ரிண்டெர் மின்விசிறி திட்டம் 2011 இல் எங்கு வசித்தோமோ அங்கே போய் பெற்றுகொள் என அரசு சொல்வது எந்த விதத்தில் நியாயம். இன்னும் 8 மாத காலமே இருக்கையில் எவ்வாறு இதுபோன்று விடு பட்டவர்களுக்கு கொடுக்க முடியும். உண்ணாவிரதம் இத்துறை அமைச்சர் சந்திப்பு என பல்வேறு முயற்சிகளை எடுத்தும் எந்த பலனும் இல்லை.போகாதது நீதி மன்றத்திற்கு தான்..அங்கு சென்று நீதியை நிலை நாட்டினாலும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவன் என்கிற பேர் தான் வரும் என்னை செய்வது. எனவே பயனாளர்களை திட்டம் முழுமையாக சென்றடைய,,இது போன்ற நடைமுறை சாத்தியமற்ற விதிமுறைகளை தளர்த்தி உத்திரவிட வேண்டுகிறோம்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்

மிக்சி,க்ரிண்டெர்,மின்விசிறி புரியாத புதிர்கள் மனு | Petition at Eluthu.comமேலே