தமிழிழ தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

உன் பிறப்பால்
பெருமை பெற்றாள் தமிழன்னை
உன் சிறப்பால்
சிறப்படைந்தது தமிழ்
உன் வீரத்தால்
வீரியம் கொண்டது தமிழிழம்
உன் வெற்றி
முழக்கத்தால் வென்றெடுப்போம் நம் தமிழிழத்தை....

உனக்கென வாழாமல்
தமிழ் மக்களுக்காய் வாழ்ந்தாய்
அதனால் தானோ உன் பெயரை
தன் குழந்தைகளின் பெயராக்கி
வீரத்தை விதைத்தனர் தமிழ் மக்கள்...

உன் போராடும் குணத்தால்
தமிழினின் வீரத்தை
உலகறிய செய்தாய் உன்
பெயரையும் உலக போராளிகளின்
முதன்மை பெயரக்கினாய்...

உனக்கென்று ஒரு வழியை
உருவாகினாய் அவ்வழியே
எங்களையும் பாதுகாப்பாய்
பயணிக்க வைத்தாய்....

உலகில் எந்த போராளிக்கும் இல்லாத
அதரவு உனக்குண்டு அதனாலையே
உன்னை தலைவனாய் ஏற்றோம் நாங்கள்...

உன் மௌனத்தால் பல கதைகள் இங்கே
தமிழில காவியம் படைக்க பிறந்தவன் நீ
புலி பதுக்குவது பாய்வதற்குதான்
புரியம் இன்னும் சில காலத்தில்....

காணும் இடமெங்கும் தமிழிழம் முழங்க
தமிழனின் வீரத்தை மறுபடியும் உலகறிய
தமிழ் தாயின் தலைமகனே
நீ வாழிய பல்லாண்டு
வாழ்க தமிழிழம் கண்டு.....

எழுதியவர் : பாலமுதன் (26-Nov-10, 7:43 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 717

மேலே