மனசின் பக்கம் மனசுக்கு விடுமுறை

வணக்கம்...



வாத்தியார் பாலகணேஷ் அவர்களின் 'டூ இன் ஒன்' புத்தகமான சரிதாயணம் ('சிரி'தாயணம்) + நான் இருக்கிறேன் அம்மாவை அண்ணன் கில்லர்ஜி அவர்களின் உதவியால் படித்தேன். அலைனில் இருக்கும் போதே வாசித்தாகிவிட்டது. இங்கு வந்ததும் வேலை மற்றும் சொந்த அலுவல்களால் எழுத்து மற்றும் வாசிப்பு குறைந்து போனதால் படித்ததை பகிர்வதற்கு நாளை... நாளை என தள்ளிப்போட்டு சென்ற வாரத்தில் புத்தகத்தை திருப்பிக் கொடுத்தாச்சு. அதனால் விரிவாக எழுதவில்லை என்றாலும் ரசித்துச் சிரிக்கும்படியான கதைகளுடனும் கொஞ்சம் வித்தியாசமான கதைகளுடன் அருமையாக இருக்கிறது. ரசித்து வாசிக்கக் கூடிய புத்தகங்களில் வாத்தியாரின் இந்தப் புத்தகமும் முக்கிய இடம் பிடிக்கும். நீங்களும் வாசித்துப் பாருங்கள்... ரசிப்பீர்கள்.



கோவை ஆவி அவர்களின் ஆவிப்பா என்னும் கவிதைகளின்... இல்லையில்லை நஸ்ரியாவை நினைத்து எழுதிய அழகிய வரிகளின் தொகுப்பையும் புத்தகங்களை வாசிக்கக் கொடுக்கும் அண்ணன் கில்லர்ஜியே கொடுத்தார். நஸ்ரியாவுக்கும் கவிதைகளுக்கும் தொடர்பில்லை என்று சொல்லியிருந்தாலும் வாத்தியார் பாலகணேஷ் அவர்கள் வரிக்களுக்கு பொருத்தமாய் நஸ்ரியா படங்களை வைத்து அழகாய் வடிவமைத்திருக்கிறார். பக்கத்துக்கு பக்கம் கலரில் நஸ்ரியா... வாவ்... அழகு. அப்புறம் கவிதைகள் வாசிக்க ஆரம்பித்து கடகடவென முடித்துத்தான் வைக்கவிட்டன... பின்னூட்டமே பக்கம் பக்கமாய் அழுத்தமாய்... அழகாய்... ரசனையாய்... எழுதும் மஞ்சுபாஷினி அக்கா முன்னுரையில் கலக்கலாய் எழுதியிருக்கிறார். அவர் ரசித்துச் சொன்னதைப் போலவே அழகான வரிகள்... ஆவிப்பா குட்டியூண்டு புத்தகமாய் இருந்தாலும் நிறைவாய்...



கதம் கதம் படம் பார்த்தேன்... பரவாயில்லை ரகம்தான் என்றாலும் நட்ராஜ் மனுசன் கலக்கியிருக்கிறார்... வசனங்கள் அருமை... படத்தின் கதையின் போக்கும்... முடிவும் அலுப்பை ஏற்படுத்தினாலும் வசனங்களுக்காகவும் நட்ராஜ்க்காகவும் பார்க்கலாம்.



கமலின் உத்தம வில்லன் பாடல்கள் வெளியீட்டு விழாவை யூடியூப்பில் பார்த்தேன். எல்லாரும் கமலின் புகழ் பாடினாலும்... இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் கமலுக்கு எழுதிய லெட்டர்,... கமல் பாலச்சந்தருக்கு எழுதிய மடல்... நாசரின் உருக்கமான பேச்சு... பார்த்திபனின் தொகுப்பு... வித்தியாசமான முறையில் பாடல் வெளியீடு... என அருமையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை பார்க்கலாம்.



அப்புறம் முக்கியமான சமாச்சாரங்க... நாளை இரவு எனது மனைவியும் குழந்தைகளும் ஒரு மாத காலத்திற்கு இங்கு தங்கும் விதமாக வருகிறார்கள்... மே மாதம் நான் அவர்களுடன் ஊருக்குப் போகிறேன்... அதனால் மனசு தளத்திற்கு மட்டுமல்ல நண்பர்களின் எழுத்துக்களை வாசிப்பதற்கும் விடுமுறை... விடுமுறை... அவர்களுடன் ஊர் சுற்றவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் இங்கு வரமுடியாது. சில நேரங்களில் சும்மா எட்டிப் பார்ப்பேன். முடிந்தால் 'வேரும் விழுதுகளும்' தொடர்கதை மட்டும் பதியப்படும்... மற்றவை இரண்டு மாத விடுமுறைக்குப் பின்னரே... அதுவரை...




நன்றி.
-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (1-Apr-15, 11:40 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 157

சிறந்த கட்டுரைகள்

மேலே