ஏழையின் கனவுகள்

ஏழையின் கனவுகள் மிகப் பெரியது

ஒரு வேளை கஞ்சி
கட்டிக்க ஒரு துணி
ஒதுங்க ஒரு இடம்
இவை மட்டும் கிடைத்துவிட்டால்..
அவனுக்கு தூக்கமும் வரும்...
தூக்கத்தில் கனவும் வரும்...

ஒட்டிய வயிறே உறவாக‌
ஏமாற்றம் மட்டுமே உணவாக‌
ஒதுக்கி வைத்த சமுதாயத்தால்
அவனுக்கு கனவு காணனும்
என்ற நினைவு கூட இருப்பதில்லை
பசி மட்டுமே பக்கத்தில்....

ஏமாற்றி பிழைப்பது அவனுக்குத் தெரியாது
வறட்டு கௌரவம்.. வறட்டு பந்தா அவனிடம் இல்லை
எல்லோரிடம் ஒன்று போல பழகுவான்
எச்சிலென துப்புவோரைக் கண்டால் விலகுவான்
எல்லா அடிப்படை வேலைக்கும் அவன் தேவை..
ஆனால் அவனை தேவைக்கு பயன்படுத்தும் சமூகம்
அவன் தேவையை நிறைவேற்றுவது இல்லை..

அவனையும் கூட ஒரு சக மனிதனாக மதித்தால் போதும்...
அவனுக்கு அப்படி ஒன்றும் பெரிய கனவு ஒன்றும் இல்லை..
இருக்கும் வரை நிம்மதியாய் வாழ்ந்தாலே போதும்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Apr-16, 12:43 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : yezhaiyin kanavugal
பார்வை : 3856

மேலே