தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
இருக்கும் தலைவரெல்லாம் முதல்வராக..
நாளும் பொழுதும் புதுப்புது அறிக்கையாக..
எல்லோரும் பழித்துப் பேசும் குழந்தையாக...
பேரம் தினம் நடக்கும் சந்தையாக..
அழுக்குச் சுவர் களெல்லாம் வண்ணமாக..
ஒதுக்கிய சிலை களெல்லாம் ஒளிமயமாக..
தெரியாத முகங்களெல்லாம் ஓட்டு கேட்க..
வாக்காளனே அவர் தம் தெய்வமாக..
விதவிதமாய் கருத்துக்கணிப்பு தினமும் வர..
எங்கிருந்தோ பணங்களெல்லாம் வீதிக்கு வர..
பக்குவமாய் பணப்பட்டுவாடா மறைவில் நடக்க..
நிற்கப்போகும் வேட்பாளரெல்லாம் வெள்ளையாய் மின்ன..
பார்க்கும் திசைகளெல்லாம் ஒலி பெருக்கி..
பார்க்காத கிராமமெல்லாம் தலைவன் போக..
தலைவனுக்கு குளிர்சாதனவண்டி தொண்டனுக்கு மொட்டவெயில்
புதிய சின்னம் பல உற்பத்தியாக
ஒருவாக்கு பெறாத சுயேட்சையும் பிரச்சாரத்தில்இறங்க
அடுத்தென்ன இலவசம் கிடைக்குமென கையைஏந்தியபடி
எங்கள்மக்கள் நிற்பதையும் மற்றதையும் பார்க்கணுமா
வாருங்கள் தமிழ்நாடு சட்டசபை தேர்தல்காண...