தமக்கா - உரையாடல் குறுங்கதை

டேய் பழனி நா ஏன் நம்ம பொண்ணுக்கு தமக்கா-ன்னு பேரு வச்சேன்னு உனக்கு தெரியுமா?
@@@@@
சரி சொல்லு.
####
என்னடா என்ன மரியாதைக் குறைவா சொல்லுண்ணு சொல்லற? நா உன்னவிட அஞ்சு வயசு பெரியவ. நா என்னொட வயசச் சொன்னதுக்கு அப்பறமும் நீ தாண்டா குருட்டு பூனை தவிட்டு பானைல விழுந்த மாதிரி என்னக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிட்ட. நீ என்னவிட அதிகமா சம்பளம் வாங்கறங்கற திமிருல்ல மரியாதக் குறைவா பேசறயடா? பொது எடம்னு பாக்காம உன்ன போட்டு மிதிச்சு சட்டினி ஆக்கிடுவேன். ஜாக்கிரதை.
@@####
அய்யோ வேண்டாங்க கண்மணி. நேத்து வீட்ல நா சத்தமா இருமிட்டங்கறதுக்காக நீ என்னப் பொரட்டி எடுத்ததே எனக்கு இன்னும் ஒடம்பு வலியா வலிக்குது. சரிங்க சொல்லுங்க.
@@@##@
நீ முட்டாள்தனமா நம்ம பொண்ணுக்கு கனிமொழின்னு பேரு வச்சிடுங்க சொன்னயே. அந்த மாதிரி தமிழ்ப் பேர வச்சா யாருடா நம்ம பொண்ணுக்கு சினிமாவில நடிக்க வாய்ப்புத் தருவாங்க? அதனால தான் அவுளுக்குத் தமக்கா-ன்னு பேரு வச்சேன்.
@@@@@
தமக்கா-ன்னா என்ன அர்த்தமுங்க.
#@@@@
முட்டாள், முட்டாள். கடைங்க விளம்பரத்ல எல்லாம் டபுள் தமக்கா-ன்னு சொல்லறங்டா. அது உனக்கு தெரியாதா?. தமன்னா மாதிரி நம்ம பொண்ணும் பெரிய நடிகையா வரும்னுதாண்டா அவுளுக்கு தமக்கா-ன்னு பேரு வச்சேன்.
@@@###
மறந்துட்டனுஙக.
@@#@
இந்திப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கறவங்க எல்லாம் அர்த்தம் தெரிந்சிட்டு பேரு வைக்கமாடங்கடா
@@#@@@###@###@###########
தமிழ்ப் பெயர்களை பிள்ளைகளுக்குச் சூட்டுவது சரியல்ல என்று செயல்படும் தமிழர்களே எண்ணிக்கையில் அதிகமா இருக்கிறார்கள்.

எழுதியவர் : மலர் (29-Sep-16, 12:01 am)
பார்வை : 204

மேலே