நட்சத்திரம்

பிறப்பு நட்சத்திரம்
பெருமைக்குரியது தான்!
தம்பிகளின்றி
சீதையுமின்றி
தொடரும் வனவாசம்
எனக்களித்த
நரகத் தந்திகளில்
எத்தனைக் காலம் தான்
நானின்னும்
மீட்டிக்கொண்டேயிருப்பது - என்
நட்சத்திரப் பெருமைதனை?

எழுதியவர் : ஜ. கோபிநாத் (6-May-24, 3:58 pm)
சேர்த்தது : Gopinath J
Tanglish : natchathiram
பார்வை : 64

மேலே