என் வாக்கு என் கடமை
மகுடம் தரிக்காத பேரரசன் நானே
மன்னர்கள் செங்கோலை ஏந்துவதும் என்னாலே
மந்திரிகள் வீழ்வதும் தட்டும் விரலினாலே
மையிட்ட விரலை மகிழ்வுடன் பார்ப்பேன்
மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பென்று
மனதுக்கு இன்மையான வாசகம் தான்
மையின் கருமை அழியும் முன்னரே
மனக்கோட்டைகள் சிதைவதை பார்த்து பழகியவன்
மதியுடன் வாக்களித்தால் மக்களாட்சி மக்களுக்காக
மலரும் என்பதில் பிடிப்புள்ளவன் நான்
மீண்டும் மீண்டும் வாக்களிப்பது என்கடமை
படைப்பு
ராம்கி