ராமகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராமகிருஷ்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jan-2018
பார்த்தவர்கள்:  189
புள்ளி:  43

என் படைப்புகள்
ராமகிருஷ்ணன் செய்திகள்
ராமகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2024 9:31 am

கண்மாய்கள் தழும்பி வழிகிறதே
கண்ணன் வரும் நாளோ

கடல் அலைகள் ஆர்பரிக்கின்றதே
கண்ணன் வரும் நாளோ

குயிலினங்கள் கூவி மகிழ்கின்றதே
கண்ணன் வரும் நாளோ

காக்கைகள் கூடி கரைகின்றதே
கண்ணன் வரும் நாளோ

கன்றுகள் துள்ளி விளையாடுகின்றதே
கண்ணன் வரும் நாளோ

களிறுகள் ஆராவாரமாய் பிளிர்கின்றதே
கண்ணன் வரும் நாளோ

குழந்தைகள் ஆனந்தமாய் குதூகலிக்கின்றதே
கண்ணன் வரும் நாளோ

கயவரும் கள்வரும் ஓடுகின்றனர்
கண்ணன் வந்தே விட்டான்

கண்ணனை பாடி கும்மியடி
கண்ணனை போற்றி கூத்தாடு

கைப்பிடி அவல் கண்ணனுக்கு
கவளமாய் வெண்ணை கண்ணனுக்கு

கண்ணா நீ வாராய்
கருணை வள்ளலே வாராய்

குடிகள் காக

மேலும்

ராமகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2024 1:55 pm

இருதயத்தின் ஓட்டையை மூடத் தெரியும்
விண்ணின் துவாரத்தை மூட வழியில்லை

நொடிகளில் காட்டை அழிக்கத் தெரியும்
வருடங்கள் ஆகும் சிறுதோப்பு தோன்ற

மாடங்கள் நின்றது மண்ணைத் தோண்டி
நிலச்சரிவை நிற்பாட்டும் உபாயம் இல்லை

இயற்கையின் சீற்றத்தை கணிக்க முடிந்தது
இயற்கையின் சீற்றத்தை தடுக்க முடிந்ததா

எல்லாம் அறிவேன் என்ற இறுமாப்பு
இயற்கையை சீண்டி வேடிக்கை பார்த்தாய்

அள்ளிக் கொடுக்கும் வள்ளல் இயற்கை
சொல்லி அடிக்கும் கடவுளும் அதுதான்

படைப்பு
ராம்கி

மேலும்

ராமகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2024 2:01 pm

மகுடம் தரிக்காத பேரரசன் நானே
மன்னர்கள் செங்கோலை ஏந்துவதும் என்னாலே
மந்திரிகள் வீழ்வதும் தட்டும் விரலினாலே
மையிட்ட விரலை மகிழ்வுடன் பார்ப்பேன்
மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பென்று
மனதுக்கு இன்மையான வாசகம் தான்
மையின் கருமை அழியும் முன்னரே
மனக்கோட்டைகள் சிதைவதை பார்த்து பழகியவன்
மதியுடன் வாக்களித்தால் மக்களாட்சி மக்களுக்காக
மலரும் என்பதில் பிடிப்புள்ளவன் நான்
மீண்டும் மீண்டும் வாக்களிப்பது என்கடமை

படைப்பு
ராம்கி

மேலும்

ராமகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2024 1:59 pm

மண்டை என்பது ஹார்ட்வேர்
மூளை உள்ளிருக்கும் சாப்ட்வேர்
முகமென்பது தான் மானிட்டர்
நெஞ்சம் என்பது இன்டராநெட்
நண்பர்கள் சுற்றங்கள் இன்டர்நெட்
செயல்கள் சொற்கள் இன்புட்
வாழ்நலன் அதனுடைய அவுட்புட்
இடர்கள் சோதனைகள் வைரஸ்கள்
இறையன்பு காக்கும் ஆன்டிவைரஸ்
வாழ்க்கையின் AMC எமனிடம்
விசித்திரகுப்தன் டேட்டாஎன்ட்ரி ஆபரேட்டர்
சித்திரகுப்தன் டேட்டா அனலிஸ்ட்
இறப்பு என்பது AMC டெர்மினேஷன்
மறுபிறப்பு வாழ்க்கை ரீலோடட்

மேலும்

ராமகிருஷ்ணன் - ராமகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2023 11:44 am

அறிதல் வேண்டும்
அறிந்த பின்னர்
புரிதல் வேண்டும்
புரிந்த பின்னர்
உணர்தல் வேண்டும்
உணர்ந்த பின்னர்
செயல்கள் வேண்டும்
செயல்கள் நிலைக்க
சீராகும் சிந்தனை
சிந்தனை சிறப்புற
சீரிய மனிதர்கள்
சிறகடித்துப் பறப்பர்
உயரிய மனிதர்கள்
உன்னத உலகிற்கு
உயிர் கொடுப்பர்
உன்னத உலகம்
கடவுளின் இல்லம்
கடவுளின் இல்லம்
கருணையின் வடிவம்
கருணை பிறக்க
காழ்ப்புணர்ச்சி பறந்தோடும்
காண்பது கனவென்றால்
கனவு பலிக்கட்டும்

மேலும்

மிக்க நன்றி பழனி ராஜன் அவர்களே 27-Nov-2023 7:27 am
நல்ல கருத்து. இதை நெரிசல் பாவில் வடிக்க தமிழிற்கு செய்த தொண்டாகும் நேரிசை ஆசிரியப்பா சீரிய மனிதரும் சிறகடித்துப் பறப்பர் உயரிய மனிதர் உன்னத உலகிற்கு உயிரை கொடுக்க உன்னத உலகமாம் கடவுளின் இல்லமே கருணையின் வடிவம் கருணை பிறக்க காழ்ப்பு என்பதும் காணா தோடும் காண்பது கனவெனின் கனவதும் மகிழ்ச்சி நன்றே 25-Nov-2023 8:13 am
ராமகிருஷ்ணன் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2023 8:59 pm

வாழ்பவர் எவரும்
வாழும்வரை மனிதர்
மரணம் தழுவினால்
பெயரும் மறந்திடும் !
கூறுவர் பிணமென்று
எரியூட்டி அழித்திடுவர்
நாதியற்ற உடலதுவும்
நாறுகின்ற மணமாகும் !

மரிக்கும் நொடிமுன்னே
எரிக்கும் நிகழ்வதுவும்
தோன்றும் கண்முன்னே
விழிகளும் கேணியாகும் !
சுற்றிலும் காத்திருப்பர்
மரணமதை உறுதிசெய்வர்
இயல்பாக இறப்பவர்களின்
இறுதிநேர காட்சிகளிவை !

மணித்துளிகள் அழுதால்
மனங்களும் லேசாகும்
விழிநீர் வற்றிவிட்டால்
கூக்குரல்கள் நின்றுவிடும் !
முகமறியா முகங்களும்
முகம் காண வந்திடுவர்
கண்டதும் சென்று விடுவர் !

உறவுகளில் சிலர் மட்டும்
அமர்ந்து உரையாடி செல்வர்
அழுதழுது களைப்படைபவர்
கழுவியதும் கலைந

மேலும்

மிகவும் நன்றி ஐயா 24-May-2023 6:15 pm
அருமை. வாழும் போது உணர்வதில்லை நாம். போகும் போது நினைக்கின்றோம். அழகாக சொன்னீர்கள் 24-May-2023 5:48 pm
ராமகிருஷ்ணன் - ரவிராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2022 2:47 pm

மனிதன் மிகப்பெரிய
சுயநலவாதி
உலகம் பிறந்தது தனக்கென
எண்ணினான்
காடுகள் அழித்தான்
வீடுகள் ஆக்கினான்
ஆற்றின் வயிற்றைக் கிழித்து
மணல் வாரினான்
ஏரியை பிளாட் போட்டு
ஏரியாவாக ஆக்கினான்
குளங்களைச் சுருக்கி
குட்டையாக மாற்றினான்
குட்டை வெளியேற்றி
குட் பை சொன்னான்
மலையை அறுத்து
மழையை நிறுத்தினான்
காசுக்காக காற்றையே
மாசாக்கினான்
பூமியை ஆஞ்சியோ செய்து
தண்ணீரை உறிஞ்சினான்
நெகிழியை உலகெங்கும் பரப்பி
பூமியை மூச்சடைத்தான்
பொறுமை கொண்ட பூமியின்
அருமை அறியாமல் ஆர்ப்பரித்தான்
வெகுண்டது பூமி பூகம்பமாய்
இயற்கை இயல்பு மீறி சீறியது
கண்ணுக்கு தெரியாத கொரானா
மண்ணுக்கு அனுப்பியது மாந்தரை
சொந்

மேலும்

ராமகிருஷ்ணன் - ராமகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2022 8:03 pm

எங்கிலும் என்னைச் சுற்றி இருட்டு
எதிலோ மிதக்கும் இனிய உணர்வு
எள்ளளவும் பயமில்லை எனது மனதில்
என்னைத் தாங்கும் அன்னையின் கருவறையில்

அன்னையின் கருவரையே எனது உலகம்
அதையும் தாண்டிய உலகை அறியேன்
அறிகிலேன் சாதிமத பேதம் என்பதை
அன்றைய கடமை தூங்குவது ஒன்றே

வாழ்க்கையின் அங்கமாய் முக்கிய நாளது
வெளியுலகில் புதிய உருவம் எடுத்தேன்
வெளிச்சம் என்பது புதிய உணர்வு
வேடிக்கை மனிதர்கள் புதிய காட்சிகள்

எனக்கென்று பெயரென்ற புதிய அடையாளம்
எழுத்தும் எண்ணும் அறியும் முன்னே
என்னுடைய சாதிமத அடையாளத்தை அச்சிட்டது
எனது சமுதாயம் எதிர்காலம் தீர்மானிக்க

பேதங்களை கருவறையில் அறியாத உள்ளம்

மேலும்

அன்பார்ந்த வணக்கங்கள் கோவை சுபா அவர்களே, தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி 26-Mar-2022 5:10 pm
வணக்கம் ராமகிருஷ்ணன் அவர்களே.. கருவறையிலும்... கல்லறையிலும் தான் மனிதன் ஜாதி மத பேதம் இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றான்... இடைப்பட்ட காலத்தில் ஜாதியென்னும் சாத்தான் வேதம் ஓத, மனிதன் ஆட்டம் ஆடி நிம்மதியில்லா வாழ்க்கை வாழ்ந்து தவிக்கிறான்...!! சமுதாய சிந்தனையை சாடும் கவி வரிகள்...!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்..!! 26-Mar-2022 6:38 am
ராமகிருஷ்ணன் - ராமகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2022 8:10 pm

முழுமுதற்க் கடவுளின் தந்தையே
மும்மூர்த்திக் கடவுள்களில் மூலவரே
மதியை முடியில் சூடியவரே
முக்காலும் எக்காலும் அறிந்தவரே
மூவுலகும் பசியாரைப் படைப்பவரே
முழுவினையும் நடத்தும் நாயகனே
மூழ்கிக் கடந்தாலும் இவ்வாழ்வை
மூப்பெய்தி முடமாகிக் கிடந்தாலும்
முழிகளை இமைகள் மறைத்தாலும்
மறையோதும் ஞானியர் சொற்கள்
மடல்கள் வழியே மறைந்தாலும்
முணுமுணுக்கும் உதடுகள் குழறினாலும்
முக்கண்ணன் அருளாசி வேண்டும்
முக்திக்கு மார்க்கம் அதுவன்றோ
மறுபிறவி இனியும் வேண்டா
மடியில் சரணடைந்தேன் மகேஸ்வரா
மகாதேவா சம்போ மகாதேவா
- திருச்சிற்றம்பலம்-

மேலும்

மிக்க நன்றி நன்னாடன் அவர்களே 03-Mar-2022 9:54 am
போற்றுதல் பா மிகவும் நிறைவாய் அருமை. 03-Mar-2022 9:48 am
ராமகிருஷ்ணன் - ராமகிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2018 6:17 pm

திட்டிவாசல் திறக்க
திமிலுடை காளைகள்
திமிறி பாய்ந்தன
திறந்த வெளிக்கு
தினவெடுத்த தோளுடை
தமிழ் வீரன்
துள்ளி தாவினான்
திமிலை பற்றி
தரையில் சாய்த்தான்
தமிழன் வீரவிளையாட்டு
தடை படாது
தறிகெட்ட மனிதர்களால்
தமிழ் வீரம்
திக்கெங்கும் பரவும்
தட்டுங்கள் கரங்களை
தலை நிமிர்ந்து
தடை கடந்து
தலையெடுப்போம் தலைமுறை
தலைமுறையாக

மேலும்

கண்ணுக்கு தெரியாத கிருமி அது கரோனா வைரஸ் என்ற நாமகரணத்தில் கண்டம் விட்டு கண்டம் தாண்டியது கணநேரத்தில் உலகனைத்திலும் தாண்டவம் ஆடுகிறது கற்றவனுக்கும் கட்டுப்படவில்லை கொற்றவனுக்கும் அடங்கவில்லை கொத்து கொத்தாய் மனிதர்கள் வீழ்ந்தனர் கண்கண்ட கணவனும் முடங்கினான் வீட்டுக்குள் கலகல என்றிருந்த குழந்தைகளும் குடிலுக்குள் கனவானும் தப்பவில்லை குடியானவனையும் விடவில்லை கலங்குகிறது எல்லோர் இதயமும் மனமும் குறைவில்லா வாழ்வு குலைந்து போனது கலந்து உறவாடிய உற்றமும் சுற்றமும் கண்ணால் பார்க்கலாம் காதால் கேக்கலாம் கைக்கு எட்டாத தூரத்தில் இருந்து காசும் பணமும் கை கொடுக்கவில்லை கடவுளையே நம்ப வேண்டிய நிலை கண்ணயரா மருத்துவ குலமே கடவுள் கடந்து போதும் கடின நாட்கள் கலங்காதிரு மனமே குதூலஹம் மலரும் புனைவு ராம்கி 10-Apr-2020 9:29 pm
ராமகிருஷ்ணன் - ராமகிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2018 12:12 am

அழகு பெட்டகமே
அரிதான பொக்கிஷமே
ஆகாய நட்ஷத்திரமே
ஆழ்கடல் முத்தே
இன்ப வெள்ளமே
இதய துடிப்பே
ஈர்க்கும் அழகே
ஈடில்லா சிலையே
உள்ளம் கவர்த்தவளே
உற்சாக பானமே
ஊற்று நீரே
ஊர்போற்றும் உமையாளே
எடுப்பான பெண்ணே
என்னை ஈர்த்தவளே
ஏக்கத்தில் நான்
ஏகாந்தத்தில் நீ
ஐயம் இல்லை
ஐஸ்வர்யம் நீதான்
ஓரவிழி பார்வையில்
ஓராயிரம் கதைகள்
ஒளஷதம் நீயெனக்கு
அஹ்தே உண்மை

மேலும்

ராமகிருஷ்ணன் - ராமகிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2018 1:04 pm

ஓ அந்த நாட்கள் ….
சக்கரம் உருட்டி விளையாடினோம்
சப்பரம் செய்து மகிழ்ந்தோம்
பிள்ளையாரை சுற்றி வந்து
பிழையை மன்னிக்க வேண்டினோம்
வயல்வெளியில் பட்டம் விட்டோம்
வாயுவின் வேகத்திற்கு ஈடாக
அரசமரம் வேப்பமரம் சுற்றி
அசராமல் ஓடி விளையாடினோம்
வேகாத வெயிலில் வியர்க்க
வெறியாய் கிட்டிப்புள் விளையாட்டு
திண்ணையில் மதியம் அமர்ந்து
திளைக்காமல் சீட்டு விளையாடினோம்
கீரை பாத்தியில் குழுசேர்த்து
கிரிக்கெட் விளையாடினோம் குதூஹலமாக
இருட்டறையில் சூரியஒளி சேர்த்து
இனிய படம் காட்டினோம்
மயங்கும் மாலை வேளையில்
மணற்பரப்பில் கபடியின் உற்சாகம்
பனி நிறைந்த மார்கழியில்
பஜனை செய்தோம் அபசுரமாக

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே