ஜல்லிக்கட்டு

திட்டிவாசல் திறக்க
திமிலுடை காளைகள்
திமிறி பாய்ந்தன
திறந்த வெளிக்கு
தினவெடுத்த தோளுடை
தமிழ் வீரன்
துள்ளி தாவினான்
திமிலை பற்றி
தரையில் சாய்த்தான்
தமிழன் வீரவிளையாட்டு
தடை படாது
தறிகெட்ட மனிதர்களால்
தமிழ் வீரம்
திக்கெங்கும் பரவும்
தட்டுங்கள் கரங்களை
தலை நிமிர்ந்து
தடை கடந்து
தலையெடுப்போம் தலைமுறை
தலைமுறையாக

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (15-Jan-18, 6:17 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : jallikkattu
பார்வை : 50

மேலே