இயற்கையின் பாடம்

இருதயத்தின் ஓட்டையை மூடத் தெரியும்
விண்ணின் துவாரத்தை மூட வழியில்லை

நொடிகளில் காட்டை அழிக்கத் தெரியும்
வருடங்கள் ஆகும் சிறுதோப்பு தோன்ற

மாடங்கள் நின்றது மண்ணைத் தோண்டி
நிலச்சரிவை நிற்பாட்டும் உபாயம் இல்லை

இயற்கையின் சீற்றத்தை கணிக்க முடிந்தது
இயற்கையின் சீற்றத்தை தடுக்க முடிந்ததா

எல்லாம் அறிவேன் என்ற இறுமாப்பு
இயற்கையை சீண்டி வேடிக்கை பார்த்தாய்

அள்ளிக் கொடுக்கும் வள்ளல் இயற்கை
சொல்லி அடிக்கும் கடவுளும் அதுதான்

படைப்பு
ராம்கி

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (22-Aug-24, 1:55 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : iyarkaiyin paadam
பார்வை : 181

மேலே