நம்பிக்கை இழக்காமல்
நம்பிக்கை இழக்காமல்
தன் இளம் தலை
அறுபட்டு போனாலும்
மீதம் இருந்த
உடல்
காற்றில்
அங்கும் இங்கும்
அலைந்து
கொண்டிருக்கிறது
ஏதாவதொன்றை
பற்றி
கொள்ளலாம்
எனும் எண்ணம்
இதற்கு
அது
தன் வேரின்
மீது கொண்டுள்ள
நம்பிக்கையும்
காரணம்
பூத்து காய்க்க
போகும் தன்னை
எப்படியும்
உயிர் பிழைக்க
வைத்து விடும்
என்னும் நம்பிக்கையில்
அலைந்து கொண்டிருக்கிறது
தன்னம்பிக்கையை
இழக்காமல் இந்த
அவரை கொடி