சிவாய நம

முழுமுதற்க் கடவுளின் தந்தையே
மும்மூர்த்திக் கடவுள்களில் மூலவரே
மதியை முடியில் சூடியவரே
முக்காலும் எக்காலும் அறிந்தவரே
மூவுலகும் பசியாரைப் படைப்பவரே
முழுவினையும் நடத்தும் நாயகனே
மூழ்கிக் கடந்தாலும் இவ்வாழ்வை
மூப்பெய்தி முடமாகிக் கிடந்தாலும்
முழிகளை இமைகள் மறைத்தாலும்
மறையோதும் ஞானியர் சொற்கள்
மடல்கள் வழியே மறைந்தாலும்
முணுமுணுக்கும் உதடுகள் குழறினாலும்
முக்கண்ணன் அருளாசி வேண்டும்
முக்திக்கு மார்க்கம் அதுவன்றோ
மறுபிறவி இனியும் வேண்டா
மடியில் சரணடைந்தேன் மகேஸ்வரா
மகாதேவா சம்போ மகாதேவா
- திருச்சிற்றம்பலம்-

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (1-Mar-22, 8:10 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
பார்வை : 220

மேலே