மனிதனின் யுத்தம்

பூக்கள் பூக்கும் பூக்காடு - இன்று
ஈக்கள் மொய்க்கும் சுடுகாடு
இருநாடு முட்டிக்கொண்டனர்.
அன்பையும் அமைதியையும்
சுட்டுக்கொன்றனர்.

சத்தம் சத்தம் ஓலச் சத்தம்.
இரத்தம் இரத்தம் எங்கும் இரத்தம்.
யுத்தம் யுத்தம் - இது காலன் யுத்தம்.
மொத்தம் மொத்தம் அழிகிறது மனிதம்.

எந்த நாயாவது நாயை கொல்லுமா?
எந்த பேயாவது பேயை கொல்லுமா?
மனிதன் மனிதனை கொல்வது ஏன்?

பேய் மனிதனை பிடித்துக்கொண்டு
பேயாட்டம் ஆடுகிறதா?
மனிதன் பேயை பிடித்துக்கொண்டு
பேயாட்டம் ஆடுகிறனா?

அதென்ன பேய்?
இரத்த காட்டேரியா?
கொள்ளிவாய் பிசாசா?
வெள்ளாடை உடுத்திய மோகினியா?

இது!!
ஆணவப்பேய்
அக்கிரமப்பேய்
அதிகாரப்பேய்
ஆசை -பேராசைப்பேய்.
இந்த பேய்க்கூட்டத்தை பிடித்துக்கொண்டு
மனிதன் ஆடுகிறான்.

பேய்களை ஓட்டுவது யார்?
மனிதனுக்குள் ஆடுகிற - இந்த
பேய்களை ஓட்டுவது யார்?

மனிதனுக்கு கோபம் வரும்போது
மனிதன் மனிதனோடு யுத்தம் செய்கிறான்.
கடவுளுக்கு கோபம் வரும்போது
கடவுள் மனிதனை சுத்தம் செய்கிறார்.

எழுதியவர் : (1-Mar-22, 4:15 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 33

மேலே