கண்ணீர் கவிதாஞ்சலிநவீன் சேகரப்பா
கண்ணீர் கவிதாஞ்சலி ..
நவீன் சேகரப்பாவிற்கு..
########$$$$####
கசடறக் கற்றிடவே உக்ரைனுக்கு சென்றாயோ !
பிசகாகிப் போனதுவோ பிள்ளையுந்தன் கனவுகளே !
உக்கிரப். போர்நடுவே உதவியின்றி மாண்டாயோ !
எக்கிரக வக்கிரமோ இழந்தோமே நவீன்உனையே !
மாசுமறு இல்லாத மனுக்குலத்தைச் சாய்ப்பதற்கு ;
ஈசுபாசு இல்லாத ஈனர்களே போர்தொடுப்பார் !
செல்வமகன் திரும்பிடுவான் சேவைசெய்து வாழவைப்பான் ;
நம்பிக்கை பொய்த்ததையா நாடெல்லாம் கதறுதையா !
நேசநாட்டான் என்றுநம்பி பாசமாய் இருந்தோமே !
மோசஞ்செய்யத் துணிந்தானே மோசக்கார உருசியனுமே !
துப்பாக்கிக் குண்டுகளா தூரத்துப் பீரங்கியா
எப்புறமும் அழித்துவிடும் ஏவுகணைத் தாக்குதலா !
எப்படித்தான் இறந்தாயோ என்னச்சொல்ல நினைந்தாயோ !
இப்படித்தான் நடக்குமென இங்கிருப்போர் நினைக்கலையோ!
இந்தியத் திருமகனே- நவீனே ! இனி என்று உனைக் காண்போமோ !
சிந்தும் எம்கண்ணீரே போர்த்தீயை அணைக்கட்டுமே !
-யாதுமறியான்.