உதிரம் உதிரும் உக்ரைன்
கலிவிருத்தம்
தங்களின் திறனையே உலகம் அறிந்திட
பொங்கிடும் வன்மமும் நெஞ்சம் எழுந்திட
எங்குமே கூறவே இயாலா குறையையே
தங்களின் இலக்காய் கூறியே தொடங்கினர்
போரையும் இரசிய நாட்டின் ஆட்சியர்
காரினின் பொழிவாய் குண்டின் பொழிவும்
வேரினை பொசுக்கும் வீரிய நெருப்பும்
பாரினை திகிலில் ஆழ்த்தும் வழியாய்
அணியாய் இருக்கும் நாட்டில் சேர்ந்தே பணியினை எதையும் செய்தல் தவறென
துணிவாய் உக்ரனை பார்த்தே மிரட்ட
பணியா அதனின் மீது கணைகள்
பெரிய தலைகள் என்று மிரட்டும்
நரித்தன நாடுகள் யாவும் ஒதுங்கியே
அரித்தன வார்த்தையை பேசி நின்றுமே
குருதியை வழியும் போரை நிறுத்தாமலே
இன்றுடன் முடிந்தது எட்டாம் நாளுமே
குன்றென கட்டமும் குண்டால் குவியலாய்
வென்றால் பனிநிறை நாடு பாலையாய்
அன்றிலாய் பொறுக்க வேண்டும் மக்களை
----- நன்னாடன்.