என்னவள்

அழகு பெட்டகமே
அரிதான பொக்கிஷமே
ஆகாய நட்ஷத்திரமே
ஆழ்கடல் முத்தே
இன்ப வெள்ளமே
இதய துடிப்பே
ஈர்க்கும் அழகே
ஈடில்லா சிலையே
உள்ளம் கவர்த்தவளே
உற்சாக பானமே
ஊற்று நீரே
ஊர்போற்றும் உமையாளே
எடுப்பான பெண்ணே
என்னை ஈர்த்தவளே
ஏக்கத்தில் நான்
ஏகாந்தத்தில் நீ
ஐயம் இல்லை
ஐஸ்வர்யம் நீதான்
ஓரவிழி பார்வையில்
ஓராயிரம் கதைகள்
ஒளஷதம் நீயெனக்கு
அஹ்தே உண்மை

எழுதியவர் : (3-Feb-18, 12:12 am)
Tanglish : ennaval
பார்வை : 122

மேலே