என் தேடல் நீ
அந்தி சாயும் நேரம் என் மனதாேடு நீ பேச
மாசிப் பனி எந்தன் மேனி தாெட்டுரச
இரவை நாேக்கி நகர்கிறது பாெழுது
இமைகள் இரண்டும் தனித்தனியாகி
உறக்கங்கள் தாெலைவாகி
ஏதாே ஒன்று எனக்குள்ளே
லப் டப் ஓசையாேடு பாேட்டி பாேட்டு
இதயத்தை தட்டி எழுப்பும்
நான்கு சுவர்களுக்குள் தனிமையாய்
மனசு வலிக்கும் நேரம்
தலையணைகள் ஈரமாகும்
என் தேடல் நீயாகி
தாெலைந்து பாேகின்றேன்
உன் நினைவில்.....