கனவுலகம்
அறிதல் வேண்டும்
அறிந்த பின்னர்
புரிதல் வேண்டும்
புரிந்த பின்னர்
உணர்தல் வேண்டும்
உணர்ந்த பின்னர்
செயல்கள் வேண்டும்
செயல்கள் நிலைக்க
சீராகும் சிந்தனை
சிந்தனை சிறப்புற
சீரிய மனிதர்கள்
சிறகடித்துப் பறப்பர்
உயரிய மனிதர்கள்
உன்னத உலகிற்கு
உயிர் கொடுப்பர்
உன்னத உலகம்
கடவுளின் இல்லம்
கடவுளின் இல்லம்
கருணையின் வடிவம்
கருணை பிறக்க
காழ்ப்புணர்ச்சி பறந்தோடும்
காண்பது கனவென்றால்
கனவு பலிக்கட்டும்