வாழ்க்கை
நிலை இலா யாக்கை
அளவிலா ஆசை
அலையலாய்த் தொல்லை
வந்து சேருமே
எட்டியது போல
தோன்றியவைக் கிட்டவில்லை
என்றால் வந்தணைக்கும்
மீளா கோபம்
கோபம் வந்தாலே
போய்விடுமே நன்மதி
மதிகெட்டாள் மிஞ்சுவதோ
தாபம் தாபம்
இவனுக்கு இவ்வளவே
என்று அளப்பவன்
அளந்து வைத்தான்
அதையும் தலைஎழுத்தாய்
எழுதி வைத்தான்
இதை அறியாது புரியாது
எவையும் வேண்டும்
எல்லாம் வேண்டும்
என்று பேராசை
தலை விரித்தாடும்
பேராசை தலைவிரித்தாட
விதி தானுமாடி
அதை மாய்க்கும்
எல்லாம் முடிந்துவிடும்
மிஞ்சுவது என்ன
ஒன்றுமில்லை ஒன்றுமில்லையே