வேற்றுமை

வேற்றுமை
₹₹₹₹₹₹₹₹₹

கனியும் காயும்
இணையாது ஒருபோதும்/
இணைந்தால் இன்பம்
இனியில்லை துன்பம் /

நிறவெறி சாதிவெறி
நாட்டிற்குள் வேண்டாம்/
வேறுபட்டு விரிசலான
வெறிபிடித்த இதயங்களை/

அன்பெனும் நூலினால்
அறவே தைத்து /
ஒற்றுமை விதைத்து
ஒன்றுபட்டு வளர்வோம் /

காயும் இனிக்கும்
கனியுடன் இணைந்தால் /
மலருடன் நாரும்
மணக்கும் பூமாலையில்/

நிலையான பஞ்சபூதங்களில்லை
பிரிவினை வாதம் /
நிலையற்ற மனிதனுக்குள்
நிறவெறி தேவைதானோ/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Jun-23, 6:11 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 25

மேலே