வந்திருக்கிறாள்
வந்திருக்கிறாள்
28 / 05 / 2024
முன்னொரு நாள் விடியலில்
ஓர் வெளிச்சம் கண்டேன்.
ஒளி சட்டென ஓடி
மறைந்தது.
என் கண்களை மூடி
மறைத்தது.
பின்னொரு நாள் மாலையில்
நிலவொளி கண்டேன்
என் ஜன்னலில்
குளிர்ந்தது...
தென்றல் என் மேனியை
குளிர்வித்தது.
இன்று என்ன பெளர்ணமியோ?
இல்லையே ...பின்
நான் என்ன அபிராமி பட்டரோ ?
என் அந்தாதிக்கு
அம்பிகை முகம் காட்டுகிறாளோ?
குழப்பம் நீடித்தது
கண்களை கசக்கிக் கொண்டேன்.
கதவோரம் 'களு'க்கென்று சத்தம்.
சட்டென்று தோன்றி மறைந்தது
ஓர் பொன்முகம்.
ஓ...அதுதான் காரணமா?
என் அத்தைமகள்
வந்திருக்கிறாள் விடுமுறைக்கு.