மழை

தன்மையை தன்னகத்தே கொண்ட
மழை அன்னை -கார்முகில் தேரில்
பூமி நோக்கி வந்து கொண்டிருக்கிறாள் -
மண்ணின் மணம் பரப்ப!!!
அன்னையின் வரவை அறிவிக்க
மத்தளமென இடி முழங்க
வண்ண விளக்குகளென
மின்னல் ஒளிபாய்ச்ச
துளிகளாய் வருகிறாள்
மழை அன்னை.......
அவளின் வரவிற்காக
காத்திருந்தது போன்று
எங்கிருந்தோ ஓடி வந்து விட்டன-
தவளைக் கூட்டங்கள்.....
இன்னிசைக் கச்சேரியை ஆரம்பிக்க!!!
மழையைக் கண்டதும் அங்கங்கே
காளான் குடைகள் விரிந்து நிற்கின்றன...
மரங்களும் சிலிர்ப்புற்று
அசைந்தாடி நிற்கின்றன.......
வாருங்களேன் .....நாமும்
மழையுடன் மகிழ்ந்திருப்போம் !!!


எழுதியவர் : பி.தமிழ் முகில் (24-Aug-11, 1:36 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 418

மேலே