சமாதானம்

ஹிம்சையால் ஆகாததை
அஹிம்சை கொண்டு
சாதிக்கும் அற்புதம் -
சமாதானம்!!!
சமாதானம் - இது
உடைந்த உள்ளங்களை
ஒன்று சேர்க்கும் ...........
வெறுப்பு எரிமலைகளை
அன்புப் பனிமலைகளாக்கும்!!!
இதயக் கேணியில்
மனிதநேயம் ஊற்றெடுக்கும்!!!
நேயம் மலரச் செய்யுமே
வேற்றுமையில் ஒற்றுமை!
ஒற்றுமை வளர்க்குமே -
பலமான நல்லுறவு!
நல்லுறவில் மேலோங்கும்-
உள்ளத்து அமைதி!
அமைதியின் மடிதனில்
ஜனிக்கும் - அன்பு உலகம்!!!!