பிரிவு

அருகாமையும் நெருக்கமும்

சொல்லாத நட்பினையும்

வார்த்தைகளும் ஸ்பரிசங்களும்

சொல்லாத காதலையும்

பிரிவு அழகாய் -

அப்பட்டமாய் வெளிச்சத்திற்கு

கொண்டுவந்து விடுகிறது!

உடனிருந்த போது

வெறுப்பு எனும் நெருப்பு

உள்ளத்தைச் சுட்ட போதும்

அந்த வெறுப்பின் ஆழத்தில்

அன்பும் காதலும் மறைந்திருப்பது -

பிரிவின் நொடியில்

வெளிப்பட்டு விடும்....

எழுதியவர் : பி.தமிழ் முகில் (18-Nov-11, 6:23 am)
Tanglish : pirivu
பார்வை : 333

மேலே