நடைபோடுவோம் வெற்றிப்பாதையில்!

கடவுள் என்ற கற்பனையை நம்பினோம்!
பலன் ஏதும் இல்லாமல் பரிதாபமானோம்!
காவிஉடை அணிந்தவனை கடவுளென எண்ணினோம்!
அவன் சுயநலச் சுடுகாட்டில் சாம்பலானோம்!
அரசாங்கம்தான் கடவுளென்று பொது உடைமையானோம்!
ஊழலென்ற சொல்லில் வீழ்ந்தே போனோம்!
தாமாக விழித்துக் கொண்டோம்!
தாமதமாக புரிந்து கொண்டோம்!
நம்பிக்கைதான் கடவுள்!
முயற்சிதான் கடவுள்!
இப்பொழுது நடைபோடுகிறோம்
வெற்றிபாதையில்
தன்னம்பிக்கையோடு

எழுதியவர் : சுனில் ”பிராபகரன்” (18-Nov-11, 10:20 am)
பார்வை : 269

மேலே