எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா. . . நீங்கள்...

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா. . . நீங்கள் பார்க்கும் இந்தக் கடைதான் திருநெல்வேலி என்ற உடன் அல்வா ஞாபகம் வரவழைக்கும் உண்மையான இருட்டுக்கடை. நெல்லையப்பர் கோவில் எதிர் புறம் இந்த கடை உள்ளது கடைக்கு பெயர் பலகை கிடையாது. விளக்கு வெளிச்சம் கிடையாது. ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும்.உண்டு.கடை மாலை 5 மணிக்குத்தான் திறப்பார்கள்.குறிப்பிட்ட அளவே தினசரி தயாரிப்பார்கள்.அல்வா விற்று தீர்ந்து விட்டால் மறுநாள் மாலை வரை காத்திருக்க வேண்டும். இந்த படத்தின் பக்கத்து சுவீட்ஸ் ஸடால் வெறிச்சோடி இருப்பதைக் காணலாம். இருட்டுக்கடையில் கூட்டத்தைப் பாருங்கள். அநேகமாக திருநெல்வேலி பகுதிகளில் ஒரே முறைப்படுதான் அல்வா தயாரிக்கிறார்கள் என்றாலும் 1900 வருடம் முதல் திருநெல்வேலியில் தொடர்ந்து வியாபாரம் செய்யும் இருட்டுக்கடைக்கு வேறு கிளை எங்கும் கிடையாது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த கடை நிறுவியவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர்.இப்போதும் அவரது வாரிசுகள் அதே பாரம்பரிய முறைப்படி அல்லா தயாரித்து விற்பனை செய்து திருநெல்வேலிக்கு மேலும் பெருமை சேர்த்து வருகின்றனர். ஞாயிறு கடை விடுமுறை.என்பது போனஸ் தகவலுங்கோ. நெல்லைக்கு வாருங்கள் . நெல்லையப்பர் காந்திமதியை வணங்குங்கள். எதிரே இருட்டுக் கடை அல்வா வாங்குங்கள்.இன்றைய விலை 1 கிலோ ரூ.180 மட்டுமே.
படம் :- 6-9-14 மாலை 5-30 மணி.

நாள் : 7-Sep-14, 10:36 am

மேலே