எனது சினிமா தேடலில் சென்னை சாலிகிராமம் பகுதியில் எனைப்போலவே...
எனது சினிமா தேடலில் சென்னை சாலிகிராமம் பகுதியில் எனைப்போலவே வாய்ப்பு தேடும் ஒருவர் என்னிடம் " சினிமா துறைக்கு வந்துதான் உங்கள் எழுத்து திறனை காட்ட வேண்டுமா ..தேவை பிரபலம் என்பதுதானா ? "
நல்ல கேள்வி ....... பதில் என்ன சொல்லவேண்டும் என்று தீர்மானித்து தானே வாய்ப்பு தேடுகிறேன் ...
பதில் இப்படிதான் சொன்னேன்
" ஆம் .. பிரபலம் வேண்டும். எனக்கு அல்ல .. என் எழுத்துக்கு ... என் சிந்தனை க்கு ....
ஓர் எழுத்தாளன் சொல்வதை சினிமா மூலம் கேட்க வைக்க முடியும் தானே ..!
ஒரு புத்தகத்தில் வரும் என் வரிகள் எத்தனை பேரை சென்று அடையும் ? 300 நொடியில் வரும் ஒரு பாடலில் என் வரிகள் புரட்சியை இந்த சமுகத்திற்கு கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
எனக்கு முன் மாதிரியே வைரமுத்து தான் ....!!
அவரின் " மூன்றாம் உலகப்போர் " அதில் உள்ள விஷயம் , வருங்க்காலத்தில் போர் எதுக்காக என்று அற்புதமாக அறிவுஜீவித்தனமாக எழுதி இருக்கிறார் ... ஆனால் எத்தனை மக்கள் படித்து இருக்கமுடியும் ? தெரிந்து இருப்பார்கள் ...!! ??
ஆனால் ஒரே பாடலில் இந்த உலகை காக்க கோரிக்கை வைத்து இருக்கிறார் ....
டூயட் படத்தில் "மெட்டுப்போடு " எனும் பாடலில் ......
இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க
பூமியை காக்க வேண்டும் .... இயற்க்கை வளம் பெற வேண்டும் எனில் நன்மை செய் .. அதாவது அதை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்.....// இசையோடு ... ஒரு செய்தி மக்களிடம் மிக எளிதாக சென்றடையும் ...!
கண்ணதாசன் ....சொன்னார் கேட்டது தமிழகம்
வைரமுத்து சொல்கிறார் கேட்கிறது தமிழகம்
இந்த சந்தோஷ் சொன்னால் ...தமிழகம் கேட்காதா ??
-----------------------------
நான் சொன்னது சரிதானா தோழர்களே ??
-இரா.சந்தோஷ் குமார்
# இன்னும் பேசுவோம்