மகரம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல்...
மகரம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)
இந்த சனிபெயர்ச்சி விசேடமான சுப பலன்கள் ஏற்படும் காலமிது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது. இந்த அற்புதமான காலத்தைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ராசி : மகரம்
நட்சத்திரம் : உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடி
அதிஷ்ட கல் : நீலக்கல்
அதிஷ்ட வண்ணம் : நீலம்
அதிஷ்ட எண் : 5, 6, 8
அதிஷ்ட திசை : மேற்கு
மந்திரியானாலும் மனதில் பட்டதை பேசுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்ததுடன், உத்தியோகத்திலும் நெருக்கடிகளை தந்த உங்கள் ராசிநாதன் சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி உங்கள் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.
எண்ணங்கள் எல்லாம் இனிது நிறைவேறும். பிறரால் போற்றப்படுவீர்கள். மதிப்பும் அந்தஸ்தும், புகழும் வாழ்க்கை வசதிகளும் கூடும். உடல்நலம் சீராகும். மனோபலம் கூடும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். நல்லவர்கள் நண்பர்களாகி, உங்களுக்கு உதவி புரிவார்கள். சுகானுபவம் உண்டாகும்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். எதிரிகள் ஏமாந்து போவார்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை உருவாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.
கறுப்பு, கருநீலப்பொருட்கள் லாபம் தரும். எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு போன்ற பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். பிரச்னைகள் எளிதில் தீரும். ஆயுள் காப்பீடு, இதர இன்சூரன்ஸ், பி.எஃப், மருத்துவக்காப்பீடு (மெடி க்ளைம்) போன்ற ஆயுள் சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. தாய் நலனில் கவனம் தேவைப்படும். அடிவயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்பட்டு விலகும். வண்டி, வாகனங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்வீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும்.
பொதுவில் விசேடமான சுப பலன்கள் ஏற்படும் காலமிது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது. இந்த அற்புதமான காலத்தைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Sani Peyarchi Palan 2014
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம்