எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் பிடித்தது ================== 1982-ல் நவகவிதை வரிசையில் வெளிவந்த...

படித்ததில் பிடித்தது
==================

1982-ல் நவகவிதை வரிசையில் வெளிவந்த கவிஞர் நா. விச்வநாதன் அவர்களின் கவிதை ஒன்றினை நண்பர்களின் வாசிப்புக்காக கீழே கொடுக்கிறேன்:-

அறிவு ஜீவி
==========

ஆயிரம் பேர்கள் சேர்ந்து
ஆளுக்கொரு
சேதி சொன்னார்கள் ;
அந்தக் காலங்களில்
அறங்கள்
வளர்ந்த விதமும் -
ஆலவிருட்சங்களாய்
புண்ணியங்கள்
பொலிந்த விதமும் -
போதாக் குறைக்கு
புத்தகங்களைத்
தின்னச் சொல்லியும்
சொன்னார்கள்.

அறங்களை உருப்போட
அரை நூற்றாண்டைத்
தொலைத்துவிட்டு
காதோர நரையும்
நெற்றிக் கோடுகளும்
ஆயிரம் பேர்களின்
அங்கீகரிப்பையும் பெற்று
அப்பால்
அரை நூற்றாண்டும்
சொல்லித் திணிக்க
ஆள்தேடிப் புறப்படும் -
அறிவின் ஜீவிதம்


பதிவு : ஜி ராஜன்
நாள் : 3-Jul-15, 7:44 pm

மேலே