எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் தோழர்களே/தோழமைகளே பொங்கல் சாரல் - 2 நானும்...

வணக்கம் தோழர்களே/தோழமைகளே  


பொங்கல் சாரல் - 2 

நானும் அண்ணனும் கை , கால்களை கழுவிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தோம், தாத்தா அடுப்படியில் தோசை சுட்டுக்கொண்டிருந்தார். தாத்தாவுக்கு உடல் நிலை வேறு சரியில்லை.நான் அடுப்படிக்கு சென்று " தாத்தா " என்றேன் , அவர் " சின்னபையா " என்றார் ( உடல் முழுவது ஒரு நடுக்கத்துடனும் , குரலில் ஒரு உதரளுடனும் ( தாத்தாவுக்கு குளிர் ஜுரம் என்று நினைக்கிறேன் ) ) . " தாத்தா உடம்பு சரியலயா என்ன ஹாச்பித்திரிக்கு  போனியா மாத்திர போட்டியா " என்றேன் . " மாத்திரை போட்ட பா , ஒரே குளுரா இருக்குது கை கால் லா உட்டு போற மாதிரி இருக்கு,  நீங்க மோதல் ல சாப்டுங்க டா  " என்றார் ( தாத்தாவுக்கு வயது 75 இருக்கும் ).

 நானும் அண்ணனும் சாப்டுக்கொண்டே இருந்தோம், மெதுவாக ஒரு மிதமான சத்தத்துடன் பக்கத்து வயல்காரரின் நாய் வந்து நின்றது ( அந்த நாய் எழுப்பிரிய சத்தம் எவ்வாறு இருந்ததது என்று கேட்டால் , சில நேரங்களில் நாம் வளர்க்கும்  நாய் நம்மிடம் எதுவோ பேச  நினைப்பத்து போல்  , ஒரு சத்தம் கொடுக்கும் அல்லவா அது போல இருந்தது ( நாய் வளர்பவர்களுக்கு புரியும் என நம்புகிறேன் ) ) . அந்த நாயை பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது. சத்த கேட்டு திரும்பி பார்த்தேன் , ஒரு விதமான மலர்ந்த முகத்தோடு மீண்டும் அதே மாதிரியான சத்தத்தை எழுப்பியது( நலமா என கேட்டிருக்கும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன் )  , நானும் அதை பார்த்து  கொஞ்சமாய் சிரித்தேன் ( நான் நலம் நீ  நலமா என்று நான் கேட்டிருப்பேன் என அதுவும் நினைத்துக்கொண்டிருக்கும் ) . நான் உண்டு முடித்தப் பிறகு ஒரு முழு தோசையை  நாயிக்கு வைத்தேன். அதுவும் அதை சாப்டுவிட்டு அதற்கு உண்டான சில வேலைகளை பார்க்கச் சென்று விட்டார். 

நானும் அண்ணனும்  சாப்டு முடித்துவிட்டு. கிணறு மற்றும் வயல்களை சுற்றிப் பார்க்க தயாரானோம். தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவர் கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டார். நான் உடனே " தாத்தா என்ன தூங்குற... வா கழனிப் பக்கம் போலாம் " என்றேன் . " எப்பா  என்னால முடியலடா  சாமி .. வட வடனு குளுருது நீங்க போயி பாருங்க " என்று தாத்தா சொன்னார். " என்ன தாத்தா குளுருதுன்னு சொல்லுற துண்டு ஒன்னு எடுத்து  தலையில் கட்டினு வா போலாம் , எழுந்துரு " என்று தாத்தாவின் கைய பிடித்து தூக்கி , ஒரு துண்டையையும் தாத்தாவிடம் கொடுத்து  தலையில் கட்டி கொள்ள  சொல்லிவிட்டு , மூவரும் கிணறுப் பக்கம் சென்றோம், 

கிணற்றில் முக்கால் பங்கு நீர் இருந்தாலும் , ஆனால்  நீர் இருப்பது கண்ணுக்கே தெரியாத அளவுக்கு கினற்றைச் சுற்றி செடிகளும் வேப்ப மரங்களும் முளைத்திருந்தது, சரி நாளைக்கு சரி பண்ணுலாம் என்று நானும் அண்ணனும் தாத்தாவிடம் சொல்லிவிட்டு , வயல் பக்கம் சென்றோம் , எங்கள் வயலில் நெல் பயிரையும் , வேர்க்கடலையும் தாத்தா விளைத்திருந்தார் , அனைத்தும் பசுமை தோற்றதும் மிகவும் அழகாக இருந்தது , கொஞ்சம் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் ( அதில் ஒன்றை நேற்று பதிவிட்டிருந்தேன் இருந்தேன் ) . இரவு ஒரு 08:00 மணி அளவில் மீண்டும் கொஞ்சம் உணவு உண்டு விட்டு உறங்கிவிட்டோம். மறுநாள் காலை 05:30 மணிக்கு தாத்தா எழுந்து தீ மூட்டி குளிர் காய்ந்துக் கொண்டிருந்தார் ( எங்கள் கிராமத்தில் எப்பொழுதுமே , குளிர் மிகவும் அதிகமாக இருக்கும் , சென்னையுடன் ஒப்பிட்டால் 3 மடங்கு அதிகம்) , 

நானும் அண்ணனும் தாத்தா சென்ற சிறிது நேரத்திலே எழுந்து , நாங்களும் குளிர் காய சென்று விட்டோம் , மணி 05:45 ஆனதும் தாத்தா " பால் கறக்கணும் பா டைம் ஆச்சி  " என்றார் . " தாத்தா இன்னைக்கு  நானே பால் கறக்குற " என்று தாத்தாவிடம் சொன்னதும் ,  " சரி எப்பா கறடா சாமி என்றார் ( நான் கிராமத்தில் இருந்த போது எங்கள் பசு மாட்டில் நான் தான் பால் கறப்பேன் ). நான் பால் கறந்து முடித்ததும் , பால் காரன் வந்து பால் வாங்கிக் கொண்டு சென்று விட்டான் . 

பனி வெகுவாக தனது அடர்த்தியை இழக்கிறது , பக்கத்து கிழனிக்காரர் , ஏர் உழுதுக் கொண்டிருந்தார். ( அந்தப் புகைப்படம் மேலே உள்ளது கவனிக்கவும் ) . இன்று பெரும் பொங்கல் என்பதால் , பாட்டி வீட்டு வேலைகளை வேகமாக செய்த்துக் கொண்டிருந்தார் , நானும் அண்ணனும் கிணற்றை சுற்றி இருந்த செடிகளை சுத்தம் செய்த்துக் கொண்டிருந்தோம் , அப்போது தாத்தாவிற்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் , அண்ணன் பக்கத்து வயல்காரரிடம் மோட்டார் வாகனத்தை வாங்கி மருத்துவமனைக்கு அழைத்துக் சென்றுவிட்டார். 

நான் கிணற்றை சுத்தம் செய்யும் வேலையே தொடர்ந்தேன். கொஞ்சம் பெரியதாக இருந்த வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டியப் பிறகு , அதன் அடி மரத்தினை வெட்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று கத்தி கழன்றிக் கொண்டு கிணற்றில் விழுந்து விட்டது. உடனே நானும் கிணற்றில் குதித்தேன் , ஆனால் கத்தி கையில் பட்டும் தப்பிச் சென்று விட்டது , பிடிக்க முடியவில்லை. காரணம்  கிணற்றில் நீர் கொஞ்சம் கலங்கலாகவும், சருகுகள் விழுந்தும் இருந்ததே.

தொடரும் ............

- உதயா 

பதிவு : உதயகுமார்
நாள் : 16-Jan-16, 9:12 pm

மேலே