எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் கலாச்சார...

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் கலாச்சார விழா

: மழையிலும் தொண்டர்கள் வருகை  

உலக கலாச்சார விழாவின் தொடக்கவிழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி. அருகில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். படம்: பிடிஐ உலக கலாச்சார விழாவின் தொடக்கவிழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி. அருகில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். படம்: பிடிஐபல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் உலக கலாச்சார விழா நேற்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.டெல்லியில் யமுனை நதிக்கரையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் நிகழ்ச்சி வளாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் உலகம் முழுக்க இருந்து சுமார் 35 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.இசை, நடனம், யோகா, சம்ஸ்கிருத பண்டிதர்களால் நடத்தப்படும் பிரார்த்தனை வகுப்புகள் என ஏராளமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இவ்விழாவை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ‘கலாச்சார ஒலிம்பிக்’ என வர்ணித்துள்ளார்.இந்நிகழ்ச்சியின் தொடக்க நாளில் பல்வேறு எதிர்பார்ப்பு களுக்கு இடையே, பிரதமர் மோடி பங்கேற்றார். விழா தொடங்கவிருந்த நிலையில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் ஆயிரக்கணக்கானவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறிது நேரத்தில் மழை நின்றது. மழை பெய்தபோதும் தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரத்யேக மேடையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு அருகில் பல முக்கிய விருந்தினர்களுடன் அமர்ந்து கண்டுகளித்தார். மோடி விழா அரங்குக்கு வந்தபோது, கூட்டத்தினர் மோடி, மோடி என ஆர்ப்பரித்தனர். பாரம்பரிய நடனத்துடன், 8,500 இசைக்கலைஞர்களின் இசையுடன் விழா பிரம்மாண்டமாக தொடங்கியது.நமஸ்கார், ஜெய் குருதேவ் என்ற வார்த்தைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது.இந்நிகழ்ச்சி காரணமாக, டெல்லி நொய்டா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் பாதையைத் தவிர்க்கும்படி, டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் தொடர் ட்விட்டுகளைப் பதிவு செய்தனர்.பிரதமர் மோடி தவிர மத்திய மற்றும் டெல்லி மாநில அமைச் சர்கள், வெளிநாட்டு பிரமுக கள் நிகழ்ச்சியில் விருந்தினர் களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியையொட்டி, டெல்லி மெட்ரோ சார்பில் அப்பகுதி வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டன.ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தனது உரையில், “பல நாடுகளிலிருந்து மக்கள் வந்துள்ளனர். இது நாம் ஒரே குடும்பம் என்ற செய்தியை உலகுக்கு அறிவிக்கிறது” என்றார். பாகிஸ்தானிலிருந்து 100-க்கும் அதிகமானவர்கள் வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டபோது, கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.தவிர்த்த தலைவர்கள்சர்ச்சைகள் மற்றும் நடைமுறைகள் காரணமாக பல்வேறு உலகத் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதைத் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்கெனவே நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்து விட்டார். இந்நிலையில், சிறப்பு விருந்தினர் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, நேபாள் அதிபர் பிதிய தேவி பண்டாரி, ஆப்கன் முன்னாள் அதிபர் அமீத் ஹர்சாய், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசாய் கிலானி, பிரான்ஸ் முன்னாள் பிரதமர் விலெபின் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக தங்களின் தூதரகங்களுக்கு அவர்கள் வியாழக்கிழமை மாலை வரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கவில்லை.கர்சாய் டெல்லியிலிருந்து உடனடியாக திரும்பிவிட்டார். சிறிசேனா உடல் நல காரணங்களுக்காக தவிர்த்து விட்டார். ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே இந்தியாவில் இருந்தபோதும், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்திய குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததால், அவர் தரப்பும் புறக்கணித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.ரூ.25 லட்சம் அபராதம்முன்னதாக, ரூ. 5 கோடி அபராதத் தொகையை செலுத்தப் போவதில்லை, சிறை செல்லத் தயார் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்திருந்தார். அவரின் இக்கருத்தால் பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி அடைந்தது.“மதிப்பு மிக்க ஒருவர் கூறும் இதுபோன்ற கருத்து சட்டத்தின் ஆட்சியை தாக்குகிறது. யாரேனும் தீர்ப்பாயத்தின் மதிப்பை தாக்கி னால் அவர்கள் சட்ட நடவடிக் கையை எதிர் கொள்ள நேரிடும்” என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. இதையடுத்து, வாழும் கலை அமைப்பு சார்பில், “ரூ. 5 கோடி அபராதம் உடனடியாக செலுத்த முடியாது. அவகாசம் தேவை” எனக் கோரப்பட்டது.இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதையடுத்து, உடனடியாக ரூ. 25 லட்சமும், எஞ்சிய தொகையை நான்கு வாரங்களுக்குள்ளும் செலுத்த தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கு வாழும் கலை அமைப்பு ஒப்புக் கொண்டது.

நாள் : 18-Mar-16, 11:27 pm

மேலே