எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிறந்த ஊர் பெருவையில் துயிலும் முத்துமாரியம்மனுக்கு குடமுழுக்கு..! பாமினி...

பிறந்த ஊர் 
பெருவையில் துயிலும்
முத்துமாரியம்மனுக்கு குடமுழுக்கு..!


பாமினி நதியோரம் வீதியுலா வருபவளே
பாரருள் புரியும் சக்திமிகக் கொணடவளே..!


பெருவிழியால் இருள்நீக்கும் முத்து மாரியம்மா
பெருவையில் நின்று ஒயிலாகத் துயில்பவளே..!

பெருயுலகின் புதிர் போலயுள் புகுந்தேகாணும்
சிறு அணுவின் சக்திகொண்டு ஆள்பவளே..!

அருள் நிறைந்தயுன் மகிமை பாடு..மிது..
பொருள் செரிந்த புலவர் பாடலாகுமம்மா..!

புலம் பெயர்ந்த மனிதரை மீண்டுமுனையே
வலம் வரயேது செய்வாய் முத்துமாரியம்மா..!

கன்னியா குறிச்சியில் காரணமாய் எழுந்தருளி
கன்னியரைக் கண்போலக் காப்பவளும் நீயே..!

முன்விளைந்த வினை யெலாம் முற்றிலும்
மூழ்கும் படிமுற்றாக விலக முத்தாகருள்வாய்..!

பெருவையில் நிலையாகக் குடிகொண்டு நீயுன்
பெருஞ்சக்தி யால்யெமை யெலாம் ஆளுகிறாய்..!

==============================================


குறிப்பு::

ஓடும் நதி:: பாமினி

ஊர்:: பெருவை

அருகேயுள்ள ஊர்:: கன்னியாகுறிச்சி

மாவட்டம்:: திருவாரூர்

நாள் : 28-Jun-17, 11:29 am

மேலே