எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆடம்பரம் தேவையில்லை! நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போது,...

ஆடம்பரம் தேவையில்லை!


நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, உடன் படித்த தோழி, மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த நாளை, திருவிழா போல கொண்டாடுவாள்; அந்த ஆண்டும், அப்படியே கொண்டாடினாள்.
எங்கள் வகுப்பாசிரியை, யார் பிறந்தநாளாக இருந்தாலும், சிறு கவிதை சொல்லி வாழ்த்துவார். அன்றும் அதே போல வாழ்த்தியதோடு, 'நம் பிறந்தநாளை கொண்டாடுவது தவறில்லை; அதை ஆடம்பரமாக கொண்டாடுவது தான் தவறு.
'ஏனென்றால், மற்ற பிள்ளைகளும், 'இது போன்று பிறந்தநாளை கொண்டாட வேண்டும்' என்று தங்கள் பெற்றோரிடம் கூறினால், அனைவராலும் கொண்டாட முடியாது அல்லவா... அதனால், இதை விட்டுவிட்டு, பிறந்தநாளன்று, ஒரு செடி நட்டு, நன்மை செய்ய வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கலாமே...' என்று கூறினார்.
ஆசிரியையின் மொழி கேட்டு, அடுத்த பிறந்த நாளில் இருந்து ஆடம்பரத்தை விட்டுவிட்டாள் தோழி.
- ரா.வித்யா, காரைக்குடி.

அதுசரி! உங்கள் தோழி செடி வளர்த்தாரா என்று சொல்லவேயில்லயே...
- பொறுப்பாசிரியர்.

நாள் : 28-Jul-17, 12:06 pm

மேலே