எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆடிப் பெருக்கு -------------------- செண்டூர் : மயிலம் அடுத்த...

ஆடிப் பெருக்கு
--------------------

செண்டூர் : மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் ஆடி பெருக்கு விழா செம்மையாக நடக்கிறது .மயிலம் பகுதியில் உள்ள எல்லோரும் கலந்து கொண்டு ஆடிப் பெருக்கு விழா கலை கட்டும். மயிலம் மலைக் கோவிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை ஊர்வலமாக அழைத்து வந்து ஆற்றங்கரையில் உள்ள இலுப்பந் தோப்பில் மதியம் ஒரு மணிக்கு பாவம் தீர்த்த அம்மனை பார்த்து விட்டு பின் தோப்புக்கு கொண்டு வந்து வைத்து   சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும் . பின்னர் மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் இரவு எட்டு / ஒன்பது மணிவரை . பின் ஒன்பது மணி தொட்டு பிள்ளையார் வீதி வழியாக உலா ஊரே கூடி நிற்கும் ...பதினோரு / பனிரெண்டு மணிக்கு பாவம் தீர்த்த அம்மன் கோவிலுக்கு வந்தடையும் முருகர் ... ஊர் முழுக்க மல்லிகை வாசமும் , வளையல் கொலுசு சத்தங்களும் ...மல்லுவேட்டி மைனர்களும் ... மைக் செட் ...மேளதாளங்களும் .... சந்தன மாலைகளும் ...ஆட்டமும் பாட்டமுமாய் ஆர்ப்பரிக்கும் ...ஊரே திருவிழா கோலத்தில் எங்கும் சிரிப்பு சத்தமும் ...மகிழ்ச்சியாய் வான வேடிக்கையோடு வழி அனுப்பி வைப்போம் .....

நாள் : 3-Aug-17, 9:52 am

மேலே