பிறன்மனை நோக்கா மாண்பு மாண்டதே
ஈகை கொடுத்தாலும் குணம் மாண்டதே
நல்வினையாற்றும் நல்லொழுக்கம் மாண்டதே
நன்மொழி பேசும் மரபு மாண்டதே
நல்லிசை கேட்கும் ரசனை மாண்டதே
சிந்தை சீர் செய்த எழுத்தின் ஆளுமை மாண்டதே
எவரிடத்தும் அன்பு வளர்க்கும் குறுநகை மாண்டதே
தீவினை தடுக்கும் பயம் மாண்டதே
இறைவா !!! இனி நான் மாளும் காலம் என்னவோ ???