யுவராஜன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : யுவராஜன் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 05-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 4 |
பாரதியின் வழி பின்பற்ற நினைப்பவன் . . பழமை மறவா புது யுக புதல்வன் . .

பிறன்மனை நோக்கா மாண்பு மாண்டதேஈகை கொடுத்தாலும் குணம் மாண்டதேநல்வினையாற்றும் நல்லொழுக்கம் மாண்டதேநன்மொழி பேசும் மரபு மாண்டதேநல்லிசை கேட்கும் ரசனை மாண்டதேசிந்தை சீர் செய்த எழுத்தின் ஆளுமை மாண்டதேஎவரிடத்தும் அன்பு வளர்க்கும் குறுநகை மாண்டதேதீவினை தடுக்கும் பயம் மாண்டதேஇறைவா !!! இனி நான் மாளும் காலம் என்னவோ ???

மனமே!!! -
நான் அழ நீ சிரிக்க
நான் போக நீ நிற்க்க
நான் பதைபதைக்க நீ பக்குவபட
நான் மறைக்க நீ அதை மறுக்க
நான் நிலை குலைய நீ நிலை நிறுத்த
நான் ஆத்திரப்பட நீ அன்புகாட்ட
நான் தவற நீ திறுத்த
நான் வெறுக்க நீ விரும்ப
நான் பகை கொள்ள நீ நல்வழி படுத்த
இன்னும் பல விந்தை செய்ய
என்னுள் எனக்காய் என்றும் இருப்பாய் !!!
காத்திருப்பு !!! -
முடிந்ததும்
அன்பு கிட்டலாம்,இல்லை ஆத்திரம் கிட்டலாம் !
எண்ணம் கிட்டலாம்,இல்லை ஏமாற்றம் கிட்டலாம் !
காதல் கிட்டலாம்,இல்லை காவியம் கிட்டலாம் !
பாராட்டு கிட்டலாம், இல்லை படிப்பிணை கிட்டலாம் !
வாய்ப்பு கிட்டலாம், இல்லை இன்ணொரு காத்திருப்பு கிட்டலாம் !!!
விழிப்போடு காத்திரு!!!!!
இரு பால் எனும் ஈர்ப்பால்
இதயம் கலந்து !
இருப்பால் இதழ் பின்னி !
பார்வையால் பகல் இரவு கடந்து !
பேசி அகமகிழ்ந்து !
கேட்டு நிலைமறந்து !
நுகர்ந்து ஸ்பரிசம் அனுபவித்து !
அவன் அவளாய்,
அவள் அவனாய்
நிலைமாறிக் கலந்து !!!
இனி வருவன தமக்காய்
வாழ்வது தான் காதலோ ???
ஆடைகளைக் களைவதில் முடிவதே காதலும், காமமும்
என்ன !!! ???
காதல் கவிதையாய் களைகிறது. . .
காமம் காதலையே களைகிறது . . . !!!
நண்பர்கள் (5)

அஷ்றப் அலி
சம்மாந்துறை , இலங்கை

கவிதமிழன்சிவமணி
Villupuram

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)