எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முகநூலில் இன்று இரண்டு கானொளி பதிவுகள் கண்டேன். 

1. முதலில் கண்டது அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் நம் அகத்திய சித்தரின் ஒரு குறிப்பின் மூலம் மின்கலம் உருவாக்கும் குறிப்பை செயல்முறை செய்து பார்த்தது. 
2. இயக்குனர் சீமான் அவர்கள் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டி. 

இந்த இரண்டு பதிவுகளிலும் நான் உணர்ந்து இரண்டு விசயங்கள் என்னவென்றால், 
ஒன்று நாம் நம் முன்னோர்களின் பெருமைகளை சொல்லிக்கொடுக்க படாமல் வளர்க்கப்பட்டிருக்கிறோம். 
இரண்டு இனி நாம் நம் எதிர்கால சந்ததிக்கு என்ன சொல்லிக்கொடுக்க போகிறோம், என்ன மிச்சம் வைக்க போகிறோம் என்பது. 

இரண்டு தலைமுறையாக நம் முன்னோர்கள் எதை நாகரீகம், எதை நம் பாரம்பரியம் என்று சொல்லி வளர்த்தார்களோ அது எதுவுமே நம் மக்களின் வாழ்க்கை முறையில் இருந்த பழக்கவழக்கங்களே இல்லை. அதுவும் உணவிலிருந்து  உடுத்தும் உடை வரை எல்லாவற்றிலும் நம் அடையாளங்களை இழந்து விட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. 
இன்று மொத்த உலகமும் நம் கலாச்சாரம், உடை, உணவு என்று எல்லாவற்றையும் தேடித்தேடி அலசி ஆராய்ந்து அவர்களும் பின்பற்ற முயற்சிக்கிறார்கள். நம் மருத்துவ முறையான சித்த வைத்தியத்திற்கு நிகரான ஒரு மருத்துவம் இந்த உலகில்  வேறோன்றும் இருக்கிறதா?. அமெரிக்க விஞ்ஞானிகள் வாய்பிழந்து போய் இருக்கிறார்கள். வோல்ட் கண்டுபிடித்த ஒரு கண்டுபிடிப்பு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அகத்தியர் கண்டுபிடித்து விட்டார் என அதிசயிக்கிறார்கள். இந்த செயல்முறை உண்மையானது, அவரது அறிவியல் குறிப்புகள் போல அவருடைய இன்ன பல குறிப்புகளும் உண்மையாகத்தான் இருக்கும் என மெய் சிலிர்க்கிறார்கள். 
சரி அவர்கள் மெய் சிலிர்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், நம் அகத்தியரின் குறிப்புகள் நம்மிடமும் இருக்கிறது, அதை இதுவரை எவரும் சோதித்து பார்க்க முயற்சிக்கவில்லையா?. 

இதுபோ‌ன்ற பல ஆயிரம் கேள்விகள் ஒருபுறம் இருக்க, 
தற்போதைய தமிழக நிலைமை நம் நிலமெல்லாம் சோதனைக் கூடம் போல மாறி போகும் சூழல் நிலவுகிறது. 
சீமான் அவர்களின் பேச்சு இன்னும் நிறைய யோசிக்க செய்கிறது. 
பனைமரம் ஆயிரம் அடிவரை வேர்விட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி வளரக் கூடிய மரம், அம்மரங்களே முறிந்து விழுந்து பட்டுபோகிறது என்றால் நாம் ஏற்கனவே நம் நிலத்தடி நீரை இழந்து விட்டோம் என்பது தான் உண்மை. 
சரி இந்த விவசாயிகள் பிரச்சினை ஆயிரம் இருக்கிறது நமக்கு, ஏன் என்றால் நாளை நாமும் மூன்று வேளை சோறு உண்ண வேண்டுமே. 
இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக நடைமுறை படுத்தும் முயற்சியில் இருக்கிறது என்றால் நம்பவே முடியவில்லை, நாமும் தமிழகத்தில் தானே இருக்கிறோம் இதை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்க கூட விடாமல் எப்படி கண் கட்டு வித்தை காட்டி ஏமாற்றியிருக்கிறார்கள். இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் நம் மக்களின் மொத்த வாழ்வாதாரமே கேள்விக்குறியாக ஆகி போகாதா?. 
மண் வளம் செத்து, சோற்றுக்கு மக்களும் மாண்டுபோகும் நிலை வருமே என்ற சிறு கருணைக் கூட இல்லாமல் இவர்கள் ஒப்புக் கொண்டு கையெழுத்து இட்டது என்ன தைரியத்தில் என்று எனக்கு தெரியவில்லை. 
அண்டை மாநிலங்கள் நமக்காக குரல் கொடுக்காமல் ஒத்துழைப்பு தருகிறது என்று நினைக்க தோன்றுகிறது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சினை, இதில் மண்ணும் கெட்டு நஞ்சு ஆகி போனால் நம் மக்களின் எதிர்காலம் என்னவாகும். 
முதலில் இந்த மீத்தேன் கொள்ளையர்களிடம் இருந்து மண்ணை காப்பாற்ற வேண்டும். 
அடுத்து இந்த தண்ணீர் இல்லா திண்டாட்டத்தில் இருந்து விவசாயியையும் விவசாயத்தையும் காக்க வேண்டும். 
எல்லா ஏரியையும் குளத்தையும் தூர் வாரியாக வேண்டும். 
இனியும் பழமையை பேசிக்கொண்டு இருப்பதை விட மீண்டும் நம் வாழ்க்கை முறைக்கு திரும்புவது சிறந்தது. அம்மியையும் ஆட்டுக்கல்லையும் நம் வீட்டிற்குள் வந்தாலே போதும் பெண்களின் உடல் உபாதைகள் குறைந்துவிடும்.
தமிழகத்தில் இருந்து மண்ணை மட்டுமல்ல, நம் உழைப்பைக் கூட வேறு யாரும் இனி தவறான முறையில் பயன்படுத்த விடக் கூடாது... 

நன்றி, 
தமிழ் ப்ரியா 


மேலும்


மேலே