எண்ணம்
(Eluthu Ennam)
இரு விழிகள் இவ்விரண்டும் இரு திசையிலிருந்து ஈர்க்கும் காந்தங்களோ?காவியங்களோ?... (Viya Drizzle)
21-Jul-2017 1:29 pm
இரு விழிகள் இவ்விரண்டும்
இரு திசையிலிருந்து ஈர்க்கும்
காந்தங்களோ?
காவியங்களோ?
காரிருள் சூழும்
கருமேகங்களோ என்று
தெரியவில்லை - ஆனால்
என் இதய கோட்டையில் நுழைந்த
இரு பூதங்கள் என்று மட்டும்
தெரியும் - ஏனெனில்
என்னை பிடித்து பேயாட்டம் ஆடுகிறதே!..